திருமணமாகி 60 நாள்..! கட்டிய மனைவி முன் குத்திப் போடப்பட்ட தலித் இளைஞர்..! பாமக நிர்வாகி மீது பகீர் புகார்! சேலம் பதற்றம்!

திருமணமான 2 மாதங்களுக்குள்ளேயே புது மாப்பிள்ளை மனைவியின் கண்முன் கொலை செய்யப்பட்ட சம்பவமானது சேலம் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.


சேலம் மாவட்டத்தில் பொட்டிபுரம் என்ற இடம் அமைந்துள்ளது. அதற்கு அருகே அமைந்துள்ள தொப்பளான் காட்டு வனப்பகுதியில் நேற்று 10 பேர் மது அருந்தியுள்ளனர். மதுபோதையில் அங்கிருந்த பட்டியலின மக்களிடம் தகராறு செய்துள்ளனர். அவர்களை கொடுமைப்படுத்தியுள்ளனர். இந்நிலையில் அவர்கள் இருவரை மடக்கிப்பிடித்து நாங்கள் எங்கள் ஊர் கோவிலில் அமரவைத்து காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தோம்.

அவர்கள் கூட்டத்தில் தப்பி சென்றவர்கள் முன்னாள் பாமக ஒன்றிய செயலாளருடன், அடியாட்களுடன் ஊருக்குள் புகுந்தனர். அங்கிருந்து வீடுகளின் மேல் கற்களை வீசி அராஜகம் செய்துள்ளனர். அப்போது அவர்கள் விஷ்ணுப்பிரியன் என்பவரது வீட்டிலும் கற்களை வீசியுள்ளனர்.

அப்போது விஷ்ணுப்பிரியனின் தாயார் மற்றும் அவனது சகோதரன் நவீன் ஆகியோர் வெளியே சென்று எட்டி பார்த்துள்ளனர். அப்போது ரவுடிகள் நவீனை வெளியே இழுத்து அவடைய கை-கால்களை கத்தியால் குத்தி உள்ளனர். சம்பவத்தை பார்த்த உடன் தாயார் கதறியுள்ளார்.

உடனடியாக சாப்பிட்டுக்கொண்டிருந்த விஷ்ணுப்பிரியன் வெளியே வந்துள்ளார். தன்னுடைய தம்பியை உள்ளே இழுத்து கேட்டை பூட்ட முயன்றார். ஆனால் அதற்குள் ரவுடிகள் விஷ்ணு பிரியாணி வெளியே இழுத்து கொலை செய்துள்ளனர். விஷ்ணுப்பிரியன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

திருமணமாகி 60 நாட்கள் ஆன நிலையில் ஊரடங்கின் காரணமாக சொந்த ஊருக்கு வந்த விஷ்ணுப்பிரியன் கொலை செய்யப்பட்டது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.