தாலியும் கட்டியாச்சு..! கணவனுடன் விருந்தும் சாப்பிட்டாச்சு..! உடை மாற்ற சென்ற மணப்பெண் செய்த செயல்! சிசிடிவி வீடியோவை பார்த்து அதிர்ந்த மணமகன்!

மணப்பெண் ஒருவர் திருமணமான கையோடு தன் கணவரை விட்டுவிட்டு தான் காதலித்த ஒருவருடன் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கேரளாவில் உள்ள கோழிக்கோடு பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கும் அவருடைய உறவினரின் மகன் ஒருவருக்கும் இடையே பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு திருமணம் நடத்தப்பட்டது. இவர்களது திருமணம் இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. திருமணத்தைத் தொடர்ந்து புதுமண தம்பதிக்கு உணவு பரிமாறப்பட்டது. புதியதாக திருமணமான கணவன் மனைவி இருவரும் அமர்ந்து உணவு உண்டனர். 

பின்னர் அனைவரும் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக ஆயத்தமாகி கொண்டிருந்தனர். அந்நேரத்தில் மணப்பெண் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக உடையை மாற்றி மேக்கப் அணிந்து வருகிறேன் என்று அவரது அறைக்குள் சென்றிருக்கிறார் . சென்ற மணப்பெண் வெகுநேரமாகியும் அறையை விட்டு வெளியே வரவில்லை . இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அனைவரும் மணப்பெண்ணை காணவில்லை என்று மண்டபம் முழுவதும் தேடி உள்ளனர். எங்கு தேடியும் மணப்பெண் கிடைக்காத காரணத்தினால் அங்கு வைக்கப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்துள்ளனர்.

அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. திருமணமான அந்தப்பெண் தான் காதலித்த இளைஞருடன் காரில் ஏறி தப்பி ஓடும் காட்சி அந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அந்தக் காட்சியைப் பார்த்த மணமகன் மற்றும் உறவினர்கள் அனைவரும் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனையடுத்து திருமணம் ஆன அந்த பெண் தன் காதலருடன் ஓடியது உறுதி செய்யப்பட்டது. பின்னர் இது குறித்து அருகில் இருந்த காவல் நிலையத்திற்கு புகார் அளிக்கப்பட்டது. இந்த சம்பவத்தை வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மாயமான அந்த பெண் மற்றும் அவரது காதலரையும் தேடி வருகின்றனர்.