கேட்க கூடாத கேள்வி எல்லாம் கேட்குறார்..! அதான்..! திருமணமான ஒன்றரை மாதத்தில் சடலமாக தொங்கிய இளம் பெண்!

திருமணமான 1.5 மாதங்களிலேயே இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவமானது திருவள்ளூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


திருச்சி மாவட்டத்தை சேர்ந்தவர் அமிர்தலிங்கம். இவருக்கு 1.5 மாதங்களுக்கு முன்னர் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த சத்யா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணம் முடிந்த கையோடு இவர்கள் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே அமைந்துள்ள சின்னகாவனத்தில் வாடகை வீடு எடுத்து தங்கியுள்ளனர்.

இருவரும் தனிமையாக வீட்டில் வசித்து வந்தனர். அவர்களுக்குள் அடிக்கடி கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளன‌. இந்நிலையில் வழக்கம்போல நேற்று காலை கணவன் மனைவியிடையே கடும் தகராறு ஏற்பட்டுள்ளது. கோபத்தின் உச்சிக்கு சென்ற அமிர்தலிங்கம் தன் மனைவி சத்யாவை கடுமையாக கடிந்துள்ளார்.

கணவன் கேட்க கூடாத வார்த்தைகளை எல்லாம் கேட்டு திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் சத்யா மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார். தகராறு நடந்து முடிந்த சில மணி நேரத்திலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அமிர்தலிங்கம் உடனடியாக அப்பகுதி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் சத்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

திருமணமாகி 1.5 மாதங்களேயான நிலையில் தற்கொலை செய்து கொண்டதால், பொன்னேரி கோட்டாட்சியர் தலைமையில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவமானது பொன்னேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.