கணவனின் ஆசைகளை பூர்த்தி செய்ய முடியவில்லையே..! திருமணமான 4 மாதத்தில் புதுப்பெண் எடுத்த விபரீத முடிவு!

திருமணமான புதுப்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவமானது ஆனைமலை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோவை மாவட்டத்திலுள்ள ஆனைமலை அருகே வேட்டைக்காரன்புதூர் எனும் இடம் அமைந்துள்ளது. இங்கு கிரி ஆனந்த் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் 6 மாதங்களுக்கு முன்னர் அதே பகுதியை சேர்ந்த சங்கீதா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். சங்கீதாவின் வயது 20.

கடந்த 4 மாதங்களாக சங்கீதா உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் கணவனின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய முடியவில்லை. கோவை மாவட்டத்திலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்துள்ளார். ஆனால் உடல்நலத்தில் எந்தவித முன்னேற்றமும் காணப்படவில்லை. இதனால் சங்கீதா மனமுடைந்து காணப்பட்டார். நாளுக்கு நாள் வாழ்க்கை மீது அவருக்கு வெறுப்பு அதிகரித்துள்ளது.

சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சங்கீதா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். சங்கீதா தூக்கில் தொங்குவதை கண்டு அக்கம்பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.

சம்பவமறிந்த காவல்துறையினர் சங்கீதாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். தற்கொலை குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். திருமணமான 6 மாதங்களிலேயே தற்கொலை செய்து கொண்டதால் ஆர்.டி.ஓ தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த சம்பவமானது ஆனைமலையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.