திருமணமாகி 4 நாளில் 2 மாத கர்ப்பம்! புதுப்பெண் கணவனுக்கு கொடுத்த பேரதிர்ச்சி! பொள்ளாச்சி சம்பவம்!

பொள்ளாச்சியில் திருமணமாகி 4 வது நாளிலேயே மணப்பெண் செய்த செயலால் அவரது கணவர் மற்றும் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த ஒரு இளைஞர் நீண்ட காலமாக திருமணத்திற்கு பெண் பார்த்து வந்தார். எந்த இடமும் சரியாக அமையாத காரணத்தினால் வால்பாறையில் உள்ள ஒரு புரோக்கர் மூலமாக அப்பகுதியில் உள்ள 27 வயதான ஒரு பெண்ணை பார்த்துள்ளனர். அப்போது பெண்வீட்டார் அந்த வாலிபருக்கு தங்களது பெண்ணை உடனடியாக திருமணம் செய்து வைக்க சம்மதம் தெரிவித்தனர்.

அதோடு மட்டுமில்லாமல் மணமகன் வீட்டில் இருந்து 12 சவரன் நகை மற்றும் 50 ரூபாய் ரொக்கப் பணமும் பெண்வீட்டார்பெற்றுக்கொண்டுள்ளனர். பின்னர் அந்த பகுதியில் உள்ள ஒரு கோவிலில் இவர்கள் திருமணம் நடைபெற்றது. 

திருமணம் முடிந்து அந்த வாலிபர் தனது வீட்டுக்கு வரும்போது அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் இவர்கள் மணக்கோலத்தில் வருவதைப் பார்த்து ஆச்சரியமடைந்தனர். பின்னர் திருமணமான நாலாவது நாளிலேயே புதுப்பெண் வாந்தி எடுத்துள்ளார். இதனால் அந்த வாலிபர் அந்த பெண்ணை மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றார்.

புதுப்பெண்ணை சிகிச்சை செய்த மருத்துவர்கள் அவர் 2 மாதம் கர்ப்பமாக உள்ளதாக தெரிவித்தார்கள். இதனைகேட்டு அதிர்ச்சி அடைந்த அந்த பெண்ணின் கணவன் தனது மனைவியிடம் இதைப் பற்றி கேட்டார். ஆனால் அவரது மனைவி எந்த பதிலும் சொல்லவில்லை. இதனால் அவர்கள் இருவரும் தங்கள் வீட்டிற்கு திரும்பிச் சென்றுள்ளனர்.

வீட்டிற்கு சென்றவுடன் அந்த வாலிபரின் அப்பா மருத்துவமனைக்கு சென்றீர்களே! என்ன நடந்தது என்று கேட்டுள்ளார். இதனால் அந்த வாலிபர் தனது மனைவி இரண்டு மாதம் கர்ப்பமாக உள்ளார் என்ற உண்மையை தனது அப்பாவிற்கு கூறியுள்ளார். இதனைக் கேட்டு அந்த வாலிபரின் குடும்பத்தார் மிகவும் அதிர்ச்சி அடைந்தனர். திருமணமாகி நான்கு நாட்களிலேயே 2 மாதங்கள் கர்ப்பமாக எப்படி இருக்க முடியும் என்று அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

பெண் கிடைக்காத காரணத்தினால் சரியாக விசாரிக்காமல் இந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டோம் என்று விரக்தி அடைந்த அந்த வாலிபர் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளார். திருமணமாகி நான்கு நாட்களிலேயே எனது மனைவி இரண்டு மாதங்கள் கர்ப்பமாக இருக்கிறார்.

அவரது கர்ப்பத்தை கலைப்பதற்காக கணவன் என்ற முறையில் என்னிடம் கையெழுத்து வாங்க அந்தப் பெண்ணின் பெற்றோர்கள் மிரட்டி வருகின்றனர் எனவும் அந்த வாலிபர் போலீசில் கூறியுள்ளார். மேலும் அப்பகுதியில் உள்ள அக்கம் பக்கத்தில் உள்ளவர்களை விசாரித்த போது அந்தப் பெண்ணுக்கு அப்பகுதியில் உள்ள வேறொரு வாலிபருடன் ஏற்கனவே திருமணம் ஆகி உள்ளது என்று தெரியவந்துள்ளது.

ஆனால் அதை மறைத்து எனக்கு திருமணம் செய்து விட்டார்கள் என்று அந்த வாலிபர் அந்த புகாரில் கூறியிருந்தார். மேலும் திருமணம் செய்வதற்காக நான் பெண் வீட்டாரிடம் நகை மற்றும் ரொக்கப்பணம் கொடுத்திருந்தேன் எனவும் அந்த புகாரில் அவர் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

விஷயமறிந்த பெண்வீட்டார் அந்த பகுதியில் இருந்து தலைமறைவாகி விட்டனர். மேலும் இவர்களுக்கு திருமணம் நடத்தி வைத்த ப்ரோக்கரையும் போலீசார் தேடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.