பொங்கல் கொண்டாடுவதற்காக உறவினரின் வீட்டிற்கு சென்ற தம்பதியினர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவமானது திருவண்ணாமலையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருமணமாகி ஐந்தே மாதம்..! தலைப் பொங்கல் கொண்டாட வந்த இடத்தில் தூக்கில் தொங்கிய புதுமணத் தம்பதி! அதிர்ச்சி காரணம்!

ஆந்திர மாநிலத்தில் சித்தூர் மாவட்டம் அமைந்துள்ளது. இங்கு வசித்துவந்த காயத்ரி மற்றும் தேவராஜ் ஆகியோர் காதலித்து 5 மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டனர். இரு குடும்பத்தினரும் இவர்களுடைய காதல் திருமணத்தை ஒப்புக்கொள்ளவில்லை. இதனால் பெங்களூருவுக்கு ஓட்டுநர் வேலைக்காக சென்ற தேவராஜ் அங்கேயே மனைவி காயத்ரி உடன் தங்கி வந்தார்.
இந்நிலையில் பொங்கல் கொண்டாடுவதற்காக ஆரணியில் வசித்துவரும் சித்தியான சந்திரா என்பவரின் வீட்டிற்கு புதுமண தம்பதியினர் சென்றனர். அவர்கள் வீட்டின் வாயிலில் இருந்த மரத்தில் இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். இதனால் பதறிப்போன உறவினர்கள் உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் இருவரது உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த தற்கொலை குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.