திருமணமாகி ஒன்றரை மாதம் தான்..! வீட்டின் ஒரு ரூமில் கணவன் சடலம்! இன்னொரு ரூமில் மனைவி சடலம்! அதிர்ச்சி காரணம்!

புதிதாக காதலித்து திருமணம் செய்து கொண்ட கணவர் மனைவி தனித்தனி அறையில் தற்கொலை செய்துகொண்ட சம்பவமானது திருவண்ணாமலையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


திருவண்ணாமலை மாவட்டத்தில் தானிப்பாடி என்ற இடம் அமைந்துள்ளது. இதற்கருகே மோத்தக்கல் என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த வேடியப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருடைய மகனின் பெயர் ஜெயகுமார். ஜெயகுமாரின் வயது 24. இவர் டிப்ளமா வரை படித்திருந்தார்.

இவர் கவிதா என்ற 23 வயது பெண்ணை காதலித்து வந்துள்ளார். இவர் டீச்சர் ட்ரெய்னிங் படித்திருந்தார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கல்லூர் என்ற கிராமத்தை சேர்ந்தவர் கவிதா. கவிதாவை சந்திப்பதற்காக ஜெயக்குமார் அவ்வப்போது கவிதாவின் கிராமத்திற்கு சென்று வந்துள்ளார். இது நாளடைவில்  கவிதாவின் பெற்றோருக்கு தெரியவந்துள்ளது.

இவர்கள் கவிதாவின் காதலை எதிர்த்து வந்தனர். இதே போன்று ஜெயக்குமாரின் வீட்டிலும் காதலுக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் ஒன்றரை மாதங்களுக்கு முன் இருவரும் தங்களுடைய வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். கோவிலில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு கோட்டக்கல் என்ற கிராமத்தில் வாடகை வீடு எடுத்து தங்கி வந்தனர்.

ஆனாலும் விஜயாவின் வீட்டிற்கு சென்று இருவரையும் கடுமையாக வசைப்பாடி வந்தனர்.  இதனால் மனமுடைந்த  இருவரும் தற்கொலை செய்துக்கொள்ள முடிவெடுத்தனர். தனித்தனி ரூமில் மின்விசிறியில் இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். 

உடனடியாக அப்பகுதி காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் 2 பேரின் சடலங்களையும் பிரேத பரிசோதனைக்கு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.