திருமணமாகி ஒரே மாதம்! ரேவதி கணவனுக்கு ஏற்பட்ட பயங்கரம்! அதிர்ச்சியில் உறவுகள்!

கழுத்தை நெரித்து புதுமாப்பிள்ளை கொலை செய்யப்பட்ட சம்பவமானது திருவண்ணாமலையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


திருவண்ணாமலைக்கு அருகே அடராப்பட்டு மாரியம்மன் கோவில் தெரு அமைந்துள்ளது. இங்கு வடிவேல் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருடைய மகனின் பெயர் உதயசூரியன். உதயசூரியனின் வயது 30. இவருக்கு ஒரு மாதத்திற்கு முன்னால் ரேவதி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. உதயசூரியன் வேலூர் ரோட்டில் மருந்தகம் நடத்தி வருகிறார்.

இதனிடையே உதயசூரியனுக்கு தினமும் அதிக அளவில்  குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. திருக்கோவிலூர் சாலை எடப்பாளையம் ஏரிக்கரை அருகே சில நாட்களுக்கு முன்னர் கழுத்து இறுக்கப்பட்ட நிலையில் உதயசூரியன் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.

உடனடியாக அக்கம்பக்கத்தினர் திருவண்ணாமலை மாவட்டத்தின் கிழக்கு காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் உடனடியாக உதயசூரியன் உடனே அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

காவல்துறையினர் கொலை குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதாவது காரணங்கள் இருக்குமா என்ற கோணத்தில் முதற்கட்ட விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த சம்பவமானது திருவண்ணாமலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.