புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களவை உறுப்பினரான நுஸ்ரத் ஜஹான் என்பவர் துருக்கி நாட்டில் திருமணம் செய்து கொண்டார்.
துருக்கியில் காதலருடன் இளம் பெண் எம்பி., நுஸ்ரத் ரகசிய திருமணம்! வைரலாகும் புகைப்படங்கள்!
திருமணத்தினால் பதவியேற்பு விழாவில் பங்கேற்காமல் போனது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் நுஸ்ரத் ஜஹான். இவர் பஸிரத் என்ற மக்களவைத் தொகுதியிலிருந்து மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார். இந்த தொகுதி மேற்கு வங்காளத்தில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வார தொடக்கத்தில் இருந்து மக்களவை உறுப்பினர்கள் பதவி ஏற்கும் விழா நடைபெற்று வந்தது. இந்நிலையில் நுஸ்ரத் ஜஹான் துருக்கியில் நிக்கில் ஜெயின் என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். திருமண நாளும் பதவியேற்பு நாளும் ஒன்றாக வந்ததால் பதவியேற்பு விழாவில் அவரால் பங்கேற்க இயலவில்லை.
திருமணம் ஆனது துருக்கி நாட்டில் போர்டம் என்ற பகுதியில் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் மிகவும் நெருங்கியவர்களின் முன்னிலையில் நடைபெற்றது. இந்த திருமணத்திற்கு மேலும் ஒரு மக்களவை உறுப்பினர் சென்றுள்ளார். மிமி சக்கரபர்தி என்ற உறுப்பினர் திருமணத்திற்காக சென்றுள்ளார். இவரும் பதவியேற்பு விழாவில் பங்கேற்காதது குறிப்பிடத்தக்கது.
இவர்களுடைய ரிசப்ஷன் விழாவானது பிரமாண்டமாக ஜூலை மாதம் 4-ஆம் தேதி கொல்கத்தா நகரில் நடைபெற உள்ளது. இதில் புகழ் பெற்ற நடிகர்கள் மற்றும் அரசியல்வாதிகள் கலந்து கொள்ள உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.