மீண்டும் கோடநாடு கொலை வீடியோ! எடப்பாடியின் தொடர்பு குறித்த பகீர் ஆதாரம்!

கோடநாடு கொலை வழக்கு தொடர்பாக வெளியாகியுள்ள புதிய வீடியோ இந்த வழக்கில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெயர் எப்படி வந்தது என்பதற்கான விடை அளிக்கும் வகையில் இருக்கிறது.


முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறித்தான் கோர நாட்டில் உள்ள ஆவணங்களை திருட சென்றதாகவும் அப்போது அங்குள்ள காவலாளியை கொலை செய்ய நேர்ந்ததாகவும் கூலிப்படையைச் சேர்ந்த சயன் மற்றும் மனோஜ் அளித்த வாக்குமூலம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது. சசிகலாவிடம் கார் ஓட்டுநராக இருந்தவர் மூலமாக இந்தக் கொலையை எடப்பாடி கச்சிதமாக அரங்கேற்றியதாகவும் சயன் மற்றும் மனோஜ் கோரியிருந்தனர்.

இதனைத் தொடர்ந்து சயன் மற்றும் மனோஜ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் கோடநாடு கொலை தொடர்பாக மேலும் ஒரு வீடியோ வெளியாகியுள்ளது.

இந்த வீடியோவில் தற்போது கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள சயன், மனோஜ் மற்றும் பிரதீப் என்பவர் இடம் பெற்றுள்ளார். ஹோட்டல் ஒன்றில் இவர்கள் 3 பேரும் உரையாடும் காட்சி அந்த வீடியோவில் இருக்கிறது.

அந்த வீடியோவில் பிரதீப் என்பவர் சயன் மற்றும் மனோஜை கோடநாடு வழக்கிலிருந்து தப்பிக்க நாங்கள் சொல்வதை செய்தால் போதும் என்று கூறுகிறார். கோடநாடு வழக்கில் தற்போது உள்ள சூழலில் உச்ச நீதிமன்றம் சென்றால் கூட நீங்கள் தப்பிக்க முடியாது என்று சயன் மற்றும் மனோஜை அச்சுறுத்துகிறார்.

நாங்கள் தப்பிக்க வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டுமென்று மனோஜ் கேட்கிறார். அதற்கு இந்த வழக்கில் நீங்கள் ஓ பன்னீர்செல்வம் அல்லது எடப்பாடி பழனிசாமி பெயரை உள்ளே இழுத்துவிட்டால் தான் உங்களால் தப்பிக்க முடியும் என்று அந்த பிரதீப் என்கிற நபர் இருவரிடமும் கூறுகிறார்.
ஆனால் கொலை நடந்த சமயத்தில் ஓ பன்னீர்செல்வம் ஆட்சியில் இல்லாத நிலையிலும் அவர் எதிர்முகாமில் இருந்த நிலையிலும் ஓ பன்னீர்செல்வம் பெயரை உள்ளே இழுத்தால் அது இருக்காது என்று பிரதீப் கூறுகிறார்.

இதனைக் கேட்ட சயன் மற்றும் மனோஜ் கொலை வழக்கில் இருந்து தப்பிக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெயரை கூறுவதில் தங்களுக்கு பிரச்சனை இல்லை என்று பிரதீப்பிடம் கூறுகின்றனர். இப்படி எடப்பாடி பழனிச்சாமி பெயரை உள்ளே இழுத்துவிட்டால் அவர்களிடம் சென்று பேரம் பேசி உங்களை கோடநாடு வழக்கிலிருந்து விடுவிக்க ஏற்பாடு செய்வதாக பிரதீப் வாக்குறுதி அளிக்கிறார்.

சுமார் நான்கு நிமிடம் ஓடக்கூடிய இந்த வீடியோவில் பிரதீப் என்று பேசக்கூடியவர் யார் என்பது தெளிவாக தெரியவில்லை. ஆனால் கோடநாடு கொலை வழக்கில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெயர் உள்ளிழுக்கப்பட்டு அதற்கான காரணத்தை தெரிவிக்கும் வகையில் இந்த வீடியோ உள்ளது.