புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து எலிகள் மீது வெற்றியடைந்துள்ளதாக ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.
எலிகளுக்கு பரிசோதனை செய்யப்பட்ட கொரோனா தடுப்பூசி..! ஆய்வில் கிடைத்த வெற்றி! அடுத்தகட்டத்திற்கு சென்ற விஞ்ஞானிகள்!

கடந்த சில வாரங்களாக உலகம் முழுவதையும் கொரோனா வைரஸ் ஆட்டிப்படைத்து வருகிறது. கிட்டத்தட்ட 50,000-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் தாக்குதலினால் இதுவரை உயிரிழந்துள்ளனர். சீனா நாட்டில் தொடங்கி, இத்தாலி, வடகொரியா, இந்தியா ஆகிய நாடுகளிலும் வேகமாக பரவ தொடங்கியுள்ளது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுடைய கைகளை சுத்தம் செய்யாமல் பொருட்களை தொடுவதிலிருந்து வேகமாக பரவுவதாக கூறப்படுகிறது. 10,00,000-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் தாக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
உலகம் முழுவதிலும் பல்வேறு நாடுகளின் ஆராய்ச்சியாளர்கள் தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அவர அமெரிக்காவின் பிட்ஸ்பர்க் பல்கலைக்கழகத்திலும் தடுப்பு மருந்து கண்டு பிடிப்பதற்காக ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இதுகுறித்து அங்கு பணியாற்றிய ஆய்வாளர் ஆண்ட்ரியா கம்பாட்டோ என்பவர் கூறுகையில், " 2003-ஆம் ஆண்டில் சார்ஸ் மற்றும் 2014-ஆம் ஆண்டில் மெர்ஸ் ஆகிய வைரஸ்கள் எங்களுக்கு நிறைய பாடங்கள் கற்பித்தன. இந்த 2 நோய்களும் கொரோனா வைரஸுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பனவாகும். இவற்றிலிருந்து காப்பதற்கு ஒரு குறிப்பிட்ட புரதத்திற்கு பெரும் பங்கு இருப்பதாக நாங்கள் நம்புகிறோம்.
நாங்கள் "பிட்கோவேக்" என்றழைக்கப்படும் தடுப்பூசியை எலிகளிடம் பயன்படுத்தினோம். முடிவில் எலிகளின் எதிர்ப்பு சக்தியானது இரண்டு வாரத்திற்குள்ளேயே அதிகரித்ததை கண்டறிந்தோம். ஆனால் இவற்றை மனிதர்கள் மீது பரிசோதிப்பதற்கு குறைந்தபட்சம் ஓராண்டு ஆகும்.
ஆனால் தற்போதைய நிலைமையை கருத்தில் கொண்டு அந்த காலக்கெடு சற்று குறைக்கப்படலாம் என்று நம்புகிறேன்" என்று கூறியுள்ளார்.
இந்த தகவலானது அமெரிக்க நாட்டு மக்களுக்கு சற்று ஆறுதல் அளிக்கும் வகையில் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.