ஜெயலலிதாவின் பெயரில் புதிய பல்கலைக்கழகம்... முதல்வருக்கு பெருகும் ஆதரவு.

ஜெயலலிதாவுக்கு உலகப்புகழ் பெறும் அளவுக்கான நினைவிடம், ஜெ. நினைவில்லம் திறந்துவைத்து பெருமைப்படுத்திய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இன்று சட்டசபையில் ஜெயலலிதாவின் பெயரில் புதிய பல்கலைக்கழகம் திறக்கும் மசோதாவுக்கு அனுமதி கொடுத்திருக்கிறார்.


திருவள்ளூர் பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரித்து புதிதாக ஜெயலலிதா பல்கலைக்கழகம் என்னும் கல்வி நிறுவனத்தை உருவாக்கப்படும் என்று கடந்த ஆண்டும் செப்டம்பர் 16ம் தேதி சட்டப்பேரவையில் முதலமைச்சர் பழனிசாமி அறிவித்தார். ஜெயலலிதாவின் நினைவாக உருவாக்கப்படும் இந்தப் பல்கலைக்கழகமானது, விழுப்புரம் மற்றும் அதனை சுற்றியுள்ள கல்லூரிகளை நிர்வகிக்கும் அதிகாரம் வழங்கப்படுகிறது.

இந்த நிலையில், சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பெயரில் அமைக்கவிருக்கும் புதிய பல்கலைக்கழகம் குறித்த மசோதாவை, உயர்கல்வித்துறை அமைச்சர் கேபி அன்பழகன் தாக்கல் செய்தார். ஜெயலலிதாவின் புகழைக் காக்கும் வகையில் எடப்பாடி பழனிசாமி செய்துவரும் செயல்கள் கட்சியினரிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.