தீபாவளிக்கு களைகட்டத் தொடங்கியுள்ள இனிப்பு விற்பனை !!

தீபாவளி பண்டிகை என்றாலே நம் அனைவருக்கும் நினைவில் வருவது பட்டாசுகளும் இனிப்புகளும் மட்டும்தான்.


அந்த வகையில் நம் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது பட்டாசுகளும் இனிப்புகளும். முந்தைய காலத்தில் ஒவ்வொரு வீட்டிலும் தாய்மார்கள் அதிரசம் , ஓட்ட வடை , முறுக்கு என விதவிதமாக பலகாரங்களை செய்து அக்கம் பக்கத்தில் இருக்கும் உறவினர்களுக்கு கொடுத்து மகிழ்ச்சியை பரிமாறிக் கொள்வது வழக்கமாக கொண்டிருந்தனர். ஆனால் தற்போது இயங்கி கொண்டிருக்கும் நவீன காலகட்டத்தில் இன் மாதிரியான பலகாரங்களை வீட்டில் செய்வதற்கு தாய்மார்களுக்கு நேரம் கிடையாது. ஆகையால் அனைவரும் இனிப்பு கடைகளை நோக்கி பயணிக்கத் துவங்கியுள்ளனர். 

பல முன்னணி இனிப்பு நிறுவனங்களான அடையார் ஆனந்த பவன் , கிராண்ட் ஸ்வீட்ஸ் , கங்கா ஸ்வீட்ஸ் போன்ற நிறுவனங்கள் மிகவும் கண்ணைக் கவரும் விதமாகவும் சுவையுடனும் கூடிய இனிப்பு வகைகள் மற்றும் கார வகைகளை உருவாக்கி கவர்ந்து வருகின்றனர். தென்னிந்தியாவைப் போல வட இந்தியாவிலும் தீபாவளி பண்டிகையை மிக விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இனிப்பு ரகங்களுக்குப் புகழ்பெற்ற "பெங்காலி மார்கெட்' பகுதியில் உள்ள கடைகளிலும் ஸ்வீட், காரம் விற்பனை சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. மில்க் கேக், காஜு கத்லி, ரஸமலாய், பாதாம் அல்வா, கிராஞ்சலி அல்வா, ஜிலேபி, ஜாங்கிரி ஆகியவை அழகாக பேக் செய்யப்பட்டு விற்கப்படுகின்றன. இதே போல் நாமும் இந்த ஆண்டிற்கான தீபாவளி பண்டிகையை இனிப்புடன் கொண்டாடி மகிழ்வோம்.