விதைப்பந்து வடிவில் களமிறங்கும் புது ரக பட்டாசு!

மக்களிடத்தில் சுற்றுச்சூழலை பற்றிய விழிப்புணர்வை உருவாக்கும் வகையில் புதியரக விதைப்பந்து உடன் கூடிய பட்டாசுகள் சந்தையில் அறிமுகமாக உள்ளது.


சுற்றுச்சூழலை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் , பசுமை விவசாயத்திற்கு உதவி செய்யும் வகையிலும் புதிய ரக விதைப்பந்துகள் உள்ளடக்கிய பட்டாசுகள் சந்தையில் அறிமுகப்படுத்த உள்ளன. இந்த ஆண்டு தீபாவளிக்கு வெடிக்காத விதைப்பந்துகள் உள்ளடிக்கிய பட்டாசுகளை வேளாண் துறையினர் அறிமுகப்படுத்துகின்றனர். 

விதைகளின் வளர்ச்சிக்கு தேவையான சத்துக்கள் மற்றும் உரங்கள் ஆகியவற்றை உள்ளடக்கி வடிவமைக்கப்பட்டுள்ள இந்த பட்டாசுகள் உண்மையான வெடி போன்று காட்சியளிக்கும். இந்தப் பட்டாசுகள் பூச்செடி விதைகள் காய்கறி விதைகள் போன்றவை உள்ளடக்கி உருவாக்கப்பட்டுள்ளது. வெடி போன்று காட்சியளிக்கும் இந்த பட்டாசுகள் வரும் திங்கட்கிழமை முதல் மாதவரத்தில் உள்ள தோட்டக்கலை அலுவலகம் மற்றும் செம்மொழி பூங்கா ஆகிய இடத்தில் விற்பனைக்கு வைக்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.