அதிக வீரியம்! வேகமாக பரவும்! மரணத்தை உண்டாக்கும்! தமிழகத்திற்குள் நுழைந்த கொரோனா A3i வைரஸ்! டாக்டர்கள் அதிர்ச்சி!

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பரவல் தற்போது கட்டுக்கடங்காமல் தமிழகத்தில் அதிகரித்து வருவதற்கு காரணம் மிகவும் வீரியம் மிக்க A3i வைரஸ் தான் என்று மருத்துவர்கள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர்.


உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் உலகெங்கிலும் பல நாடுகளில் கோரத்தாண்டவத்தை காட்டி வருகிறது. இதே போல் நம்முடைய தமிழகத்திலும் நாளுக்கு நாள் இந்த வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதி வேகமாக உயர்ந்து வருகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரையில் இதுவரை 31,667 பேர் இந்த வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிலும் குறிப்பாக சென்னையில் மட்டும் 22, 149 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இறப்பு விகிதமும் 0.6% ஆகவே இருந்து வந்தது. 

ஆனால் சமீபகாலமாக அதிரடியாக தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. இது தற்போது சுகாதாரத்துறை பணியாளர்கள் மத்தியிலும் மருத்துவர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுவது இந்த வைரஸின் புதிய விதமாகும். இதுவரை வீரியம் குறைந்த A2a என்ற வைரஸ் சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளிலும் பரவி வந்தது. இது வீரியம் குறைந்தது என்பதால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு சளி, இருமல், காய்ச்சல், தொண்டை வலி உள்ளிட்ட அறிகுறிகளை அளித்து பின்னர் தான் நுரையீரலைத் தாக்கக் கூடியதாக இருந்தது. 

ஆனால் தற்போது அதிக வீரியம் கொண்ட A3i என்ற வகைப்பாடு கொண்ட கொரோனா வைரஸ் அதி வேகமாக பரவ ஆரம்பித்துள்ளது. இந்த வைரஸ் மத்திய பிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களில் இருந்து புலம்பெயர்ந்த நபர்களின் மூலம் தமிழகத்திற்குள் பரவ ஆரம்பித்து இருக்கலாம் என்று யூகிக்கப்படுகிறது. மேலும் மற்ற மாநிலங்களில் இருந்தும் மற்ற நாடுகளிலிருந்தும் தாயகம் திரும்பிய அவர்களால் இந்த வைரஸ் இங்கு நுழைந்திருக்க அதிக வாய்ப்புக்கள் உள்ளதாகவும் சந்தேகிக்கப்படுகிறது. ஒருவேளை இந்த கொரோனா வைரஸ் இன் இந்த வகை வைரஸினால் தொற்று ஒருவருக்கு ஏற்பட்டால் அவருக்கு எந்த ஒரு அறிகுறியும் தென்படாத நேரடியாக இந்தக் கிருமி அவரது நுரையீரலை தாக்கி மூச்சுத்திணறல் ஏற்படுத்தி அவர்களது உயிருக்கே ஆபத்து அளிக்கக்கூடும்.

இந்த அதிர்ச்சி தகவலை மருத்துவர்களே வெளியிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் இருந்து தப்பிப்பதற்கு ஒரே வழி கைகளை நாம் எப்பொழுதும் சுத்தமாகவும் நாம் இருக்கும் இடங்களை சுகாதாரமாகவும் பார்த்துக்கொள்வது ஆகும் எனவும் கூறுகின்றனர். முக கவசங்களை சரியான முறையில் பயன்படுத்தி அடிக்கடி கைகளை கழுவவும் சுத்தமாக இருக்கவேண்டும் எனவும் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். மருத்துவர்கள் கூறும் சரியான வழிமுறைகளைப் பின்பற்றி இந்த வைரஸ் தொற்றில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்வதன் மூலமாக இந்த நாட்டையும் நம்மால் பாதுகாக்க இயலும் என்பது நிதர்சனமான உண்மையாகும்.