ஆவின் நிறுவனம் தயாரித்த கேரட் மைசூர்பா! தீபாவளி ஸ்பெஷல்!

இந்த ஆண்டு தீபாவளி ஸ்பெஷலாக ஆவின் நிறுவனம் "கேரட் மைசூர்பா" எனும் புதிய ரக இனிப்பு வகையை அறிமுகப்படுத்தியுள்ளது.


ஆவின் நிறுவனம் என்றாலே அதனுடைய நெய், பால் , வெண்ணெய் என பல பொருட்களை சொல்லிக்கொண்டே போகலாம் . அந்த வகையில் இந்த ஆண்டு தீபாவளிக்கு என்று புதுவித இனிப்பு வகையான கேரட் மைசூர்பா எனும் இனிப்பு வகையை தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு சேலம் ஆவின் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. சேலத்தின் அருகே அமைந்துள்ள தலவாய்பட்டி என்னும் இடத்தில் செயல்பட்டு வரும் ஆவின் நிறுவனம் இந்த புதிய ரக இனிப்பு வகையை அறிமுகப்படுத்தியுள்ளது. சேலத்தை சுற்றி உள்ள பால் வங்கிகளிடமிருந்து நாள்தோறும் நிறுவனத்திற்கு தேவையான பாலை பறிமுதல் செய்து வெண்ணெய் ,நெய் இனிப்பு வகைகள் என பல பொருட்களை தயார் செய்து விற்பனை செய்து வருகின்றது. இந்த ஆண்டிற்கான தீபாவளி பண்டிகை நெருங்கிக் கொண்டிருக்கும் இந்நேரத்தில் கிட்டத்தட்ட 90% இனிப்பு பொருட்கள் தயார் செய்யும் பணியை இந்த நிறுவனம் முடித்து விட்டதாக கூறப்படுகிறது. 

இந்த ஆண்டிற்கான இனிப்பு வகைகளில் புதிதாக ஒரு இனிப்பு வகை செய்ய வேண்டும் என்ற நோக்கில் இந்த கேரட் மைசூர்பா உருவானதாக கூறப்படுகிறது. இந்தப் புதிய ரக இனிப்பை உருவாக்குவதற்காக அருகிலிருந்த உழவர் சந்தையில் இருந்து தேவையான அளவு கேரட் களை பறிமுதல் செய்து நன்றாக கழுவி சுத்தம் செய்து அதனுடன் நெய் பால் சர்க்கரை என தேவையான எல்லா பொருட்களையும் சேர்த்து இந்த மைசூர்பா உருவாக்கப்பட்டுள்ளது . ஏற்கனவே தமிழகத்தில் மைசூர்பா உற்பத்தி செய்வதற்காகவே பலவித நிறுவனங்கள் போட்டியில் உள்ளன அந்த வகையில் தற்போது ஆவின் நிறுவனமும் இணைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகியுள்ள இந்த புதிய ரக இனிப்பு வகையை நாமும் சுவைத்து பார்ப்போம்.