பச்சைக் குழி விரியன்..! பீதி வரவழைக்கும் புதிய வகை பாம்பு இந்தியாவில் கண்டுபிடிப்பு!

இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளபுதிய வகையான பச்சை குழி விரியன் பாம்புக்கு பிரபல சினிமா கதாபாத்திரத்தின் பெயர் சூட்டப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


அருணாச்சல பிரதேச மாநிலத்தில் வாகி மற்றும் கேசா ஆகிய மாவட்டங்கள் அமைந்துள்ளன. இந்த மாவட்டங்களுக்கு இடையே பாகிபுலா விலங்குகள் காப்பகம் அமைந்துள்ளது. இங்கு சில நாட்களுக்கு முன்னர் புதிய வகையான பச்சைக்கொடி விரியன் பாம்பு இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டது.

இந்திய விலங்கியல் ஆய்வாளர்களும், மும்பை மாநகரை சேர்ந்த ஆய்வாளர்களும் நடத்திய இந்த சோதனையில் புதிய வகையான பச்சை குழி விரியன் பாம்பு இருப்பதை உறுதி செய்தனர். பின்னர் இந்த புதிய வகையான பாம்பிற்கு என்ன பெயர் சூட்டுவது என்று ஆய்வாளர்கள் கலந்தாலோசித்தனர்.

ஆலோசனைக்குப் பிறகு மிகவும் பிரபலமான பெயர் ஒன்று சூட்டியுள்ளனர். குழந்தைகளுக்கு உன் பிடித்த படங்களில் ஒன்றான "ஹாரி பாட்டர் அண்ட் தி சேம்பர் ஆஃப் சீக்ரெட்" திரைப்படத்தில் பிரபலமடைந்த கதாபாத்திரமான (Trimeresurus salazar) "ட்ரிமேரேசூரஸ் சலாசர்" பெயரை சூட்டி உள்ளதாக சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

இந்த சம்பவமானது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.