கொரோனா வைரஸின் தாக்குதல்களை தாக்கு பிடிப்பதற்கான நோயெதிர்ப்பு சக்தி உள்ளதா என்ற ரத்தப்பரிசோதனை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கொரோனாவை உங்கள் உடம்பு தாங்குமா..! ஒரே ஒரு ரத்த பரிசோதனையில் கண்டுபிடித்துவிடலாம்..! எப்படி தெரியுமா?
கடந்த சில வாரங்களாக உலகம் முழுவதையும் கொரோனா வைரஸ் ஆட்டிப்படைத்து வருகிறது. கிட்டத்தட்ட 19,500-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் தாக்குதலினால் இதுவரை உயிரிழந்துள்ளனர். சீனா நாட்டில் தொடங்கி, இத்தாலி, வடகொரியா, இந்தியா ஆகிய நாடுகளிலும் வேகமாக பரவ தொடங்கியுள்ளது.
இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுடைய கைகளை சுத்தம் செய்யாமல் பொருட்களை தொடுவதிலிருந்து வேகமாக பரவுவதாக கூறப்படுகிறது. 4,00,000-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் தாக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
தற்போது உலகெங்கிலும் மருத்துவர்களும் செவிலியர்களும் குரானா பாதித்தவர்களுடன் பணியாற்றி வருகின்றனர். அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தியை ரத்தப் பரிசோதனையின் மூலம் கண்டுபிடிப்பதற்கு பல்வேறு ஆராய்ச்சியாளர்கள் முயற்சி செய்து வருகின்றனர்.
அவ்வகையில், அவர்களை தனிமைப்படுத்த அமல் சிகிச்சைகளை மேற்கொள்ள பயன்படுத்திக்கொள்ளலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.இதன்மூலம் சிகிச்சைகளை விரைவாக அளிக்க இயலும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.
இருப்பினும் இந்த நோய் எதிர்ப்பு சக்தி எவ்வளவு காலம் நீடிக்கும், ஆய்வுகள் எவ்வளவு துல்லியமானவை ஆகியன குறித்து பல்வேறு கேள்விகள் எழுகின்றன. அமெரிக்க நாட்டை சேர்ந்த பயோமெரிக்கா.இன்க் மற்றும் தென்கொரியாவை சேர்ந்த சுகென்டென்.இன்க் ஆகிய நிறுவனங்கள் இந்த ரத்த பரிசோதனை ஆய்வுகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன.
இந்த செய்தியானது உலகெங்கும் இருக்கும் மக்களுக்கு சற்று தைரியத்தை வழங்கியுள்ளது.