கொரோனாவை குணப்படுத்த கடலட்டையின் ரத்தம்..! ரத்தத்தில் 40 மடங்கு அதிக ஆக்சிஜனை வழங்குவது கண்டுபிடிப்பு!

கொரோனா வைரஸை குணப்படுத்துவதற்கான புதிய மருந்தினை ஃபிரான்ஸ் நாட்டு விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ள செய்தியானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


கடந்த சில வாரங்களாக உலகம் முழுவதையும் கொரோனா வைரஸ் ஆட்டிப்படைத்து வருகிறது. கிட்டத்தட்ட 65,000-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் தாக்குதலினால் இதுவரை உயிரிழந்துள்ளனர். சீனா நாட்டில் தொடங்கி, இத்தாலி, வடகொரியா, இந்தியா ஆகிய நாடுகளிலும் வேகமாக பரவ தொடங்கியுள்ளது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுடைய கைகளை சுத்தம் செய்யாமல் பொருட்களை தொடுவதிலிருந்து வேகமாக பரவுவதாக கூறப்படுகிறது. 12,50,000-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் தாக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த வைரஸ் தாக்குதலை எதிர்த்து போராடும் மருந்தை கண்டுபிடிப்பதற்கு, பல நாட்டு விஞ்ஞானிகள் தொடர்ந்து தீவிரமாக ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றனர். பல நாட்டு விஞ்ஞானிகளும் பல்வேறு வகையான முறைகளை பரிந்துரை செய்து வருகின்றனர். இந்நிலையில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த சில விஞ்ஞானிகள், கடல் அட்டை ரத்தத்தினை இந்த வைரஸ் தாக்குதலுக்கு எதிராக உபயோகப்படுத்தலாம் என்று பரிந்துரைத்துள்ளனர்.

ஏனென்றால், கொரோனா வைரஸ் பாதித்த நபருக்கு ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்படுவதாக கூறப்படுகிறது. மனிதனின் ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் தரக்கூடிய ஆக்சிஜனை காட்டிலும் கடல் அட்டை ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் 40 மடங்குகள் ஆக்சிஜன் தரும் வல்லமை படைத்ததாக உள்ளது. 

கடல் அட்டை ரத்தமானது மனித உடலில் துல்லியமாக செயல்பட்டு வருவதாக ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன. பாதிக்கப்பட்டவருக்கு இந்த கடலட்டை ரத்தமானது சீரான சுவாசத்தை ஏற்படுத்தி தரக்கூடியதாகவும் அமைந்துள்ளது என்றும் கூறப்படுகிறது.

பிரான்ஸ் நாட்டின் தேசிய சுகாதார மற்றும் தனிமனித பாதுகாப்புக்கான நிறுவனம் ஆகியவை இந்த மருத்துவமுறைகளை அங்கீகரித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த செய்தியானது ஃபிரான்ஸ் நாட்டு மக்களிடையே சற்று ஆறுதலை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.