பிக்பாஸ் 3 அதிரடி மாற்றம்! பிரபல நடிகர் அதிரடி நீக்கம்! தொகுப்பாளினி ஆன பிரபல நடிகை!

பிக்பாஸ் நிகழ்ச்சியானது தமிழைப் போலவே தெலுங்கு மொழியிலும் நடத்தப்பட்டு வருகிறது. தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சியானது உலகநாயகன் கமலஹாசன் அவர்களால் தொகுத்து வழங்கப்பட்டு வருகிறது.


இதே போல் தெலுங்கில் பிக்பாஸ் நிகழ்ச்சியானது பிரபல நடிகர் நாகர்ஜுனாவால் தொகுத்து வழங்கப்பட்டு வருகிறது. நடிகர் நாகார்ஜுனா தன்னுடைய 60வது பிறந்தநாளை ஒட்டி தன் குடும்பத்தினருடன் பிறந்தநாளை கோலாகலமாக ஸ்பெயின் நாட்டில் கொண்டாடி வருகிறார். 

அப்போது அங்கு எடுத்த புகைப்படங்களையும் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார் நடிகை சமந்தா. இதனால் வார இறுதியில் தொகுத்து வழங்க வேண்டிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க தவறிவிட்டார் நடிகர் நாகர்ஜுனா. தற்போது தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் பொறுப்பை நடிகை ரம்யாகிருஷ்ணன் ஏற்று உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனை உறுதி செய்யும் வகையில் இன்றைய தெலுங்கு பிக் பாஸ் புரோமோவில் நடிகை ரம்யா கிருஷ்ணன் இடம்பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ரம்யா கிருஷ்ணனின் வரவு, தெலுங்கு பிக் பாஸ் பார்க்கும் ரசிகர்களிடத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்று தான் கூற வேண்டும்.