திருமணமாகி 8 மாதத்தில் 3 மாத கர்ப்பம்..! முதலில் தூக்கில் தொங்கிய மனைவி..! பிறகு உயிரை மாய்த்துக் கொண்ட கணவன்..! அதிர வைக்கும் காரணம்!

பண்ருட்டி: திருமணமான 8 மாதத்தில் கணவன், மனைவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


பண்ருட்டியை சேர்ந்தவர் மணிகண்டன். 29 வயதான இவர் , கோயில் கோபுரத்தில் உள்ள பொம்மைகளுக்கு வர்ணம் தீட்டும் வேலை செய்வது வழக்கம். இந்நிலையில், மணிகண்டன் அதே பகுதியை சேர்ந்த மகேஸ்வரி (22 வயது) என்பவரை காதலித்து வந்தார். இருவரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், இருவரது காதலுக்கும், பெற்றோர் தரப்பில் அனுமதி தரப்பட்டது. இதையடுத்து, உறவினர்கள் சூழ 8 மாதங்களுக்கு முன் இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.  

திருமணமான சில மாதங்களிலேயே மகேஸ்வரி கர்ப்பம் தரித்தார். ஆனால், மணிகண்டனோ மதுவுக்கு அடிமையாகிவிட்டார். இதனால், வேலைக்குச் செல்லாமல் குடிப்பதையே  முழு நேர வேலையாக மணிகண்டன் செய்திருக்கிறார். இதை மனைவி கண்டித்ததால் இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இரவும் இதேபோல  மணிகண்டன் குடித்துவிட்டு வீட்டிற்கு வரவே, மகேஸ்வரி மன வேதனை அடைந்தார். இதனால், இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. பிறகு போதையில் மணிகண்டன் உறங்கிவிட்டாராம்.

நள்ளிரவில்  விழிப்பு வந்த அவர் தனக்கு அருகே மின்விசிறியில் மனைவி தூக்குப் போட்டு தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். சில நிமிடங்களில் அவரும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.  காலையில் பொழுது விடிந்து நீண்ட நேரமாகியும் இருவரும் வெளியில் வராததைக் கண்ட அக்கம் பக்கத்தினர் வீட்டினுள் சென்று பார்த்துள்ளனர். அப்போது கணவன், மனைவி தற்கொலை  செய்துகொண்ட விவரம் தெரியவந்துள்ளது.

இதையடுத்து போலீசாருக்கு தகவல் கூறப்பட்டு, அவர்கள் விரைந்து வந்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த வீட்டை சோதனையிட்டதில்,  மணிகண்டன் எழுதி வைத்த கடிதம் ஒன்று கிடைத்தது.   அந்த கடிதத்தில், ''குடிப்பழக்கத்தால் எனது மனைவியையும், குழந்தையையும் பறிகொடுத்துவிட்டேன். என் மனைவியை பிரிந்து என்னால்  வாழ முடியாது. அவர் சென்ற இடத்திற்கே நானும் செல்கிறேன்,'' என்று மணிகண்டன் எழுதியுள்ளார்.  இச்சம்பவம் பண்ருட்டி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.