விடிந்தால் திருமணம்! மரத்தில் சடலமாக தொங்கிய புதுமாப்பிள்ளை! நேரில் பார்த்து அதிர்ச்சியில் உறைந்த பெற்றோர்!

நாளை மறுநாள் திருமணம் நடக்கவிருந்த மாப்பிள்ளை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் புவனகிரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கடலூர் மாவட்டத்தில் புவனகிரி எனும் இடம் அமைந்துள்ளது. அங்குள்ள மருதூர் மேட்டுத்தெருவில் பாரி என்பவர் வசித்துவருகிறார். இவருடைய மகனின் பெயர் குணசேகரன். குணசேகரனின் வயது 30. இவருக்கு திருமணம் நடத்தி முடிக்க பெற்றோர் முடிவெடுத்தனர். ஆகையால் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை நிச்சயித்தனர்.

நாளை மறுநாள் இவ்விருவருக்கும் திருமணம் நடைபெறுவதாக நிச்சயிக்கப்பட்டிருந்தது. இரு வீட்டாரும் திருமணத்துக்கான ஏற்பாடுகளில் மும்முரமாக ஈடுபட்டு வந்தனர். 

இந்நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் குணசேகரன் நேற்று முன்தினம் அவருடைய வீட்டின் பின்புறத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் தூக்கில் தொங்கி கொண்டிருந்ததை கண்ட உறவினர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவம் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் குணசேகரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். தற்கொலைக்கான காரணம் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். புதுமாப்பிள்ளை தற்கொலை செய்த சம்பவமானது புவனகிரியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.