பெண்களுக்கு ஆண்களை வாடகைக்கு அனுப்பி வைக்கும் புதிய ஆப்! எதற்கு தெரியுமா?

மன அழுத்தத்தில் வாடும் பெண்கள், விரும்பிய வகையில், ஆண்களை வாடகைக்கு எடுத்துக் கொள்ளக்கூடிய புதிய ஆப் ஒன்று அறிமுகமாகியுள்ளது.


இந்த ஆப்-ஐ குஷால் பிரகாஷ் என்ற இளைஞர் அறிமுகம் செய்துள்ளார். #RABF எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த ஆப்பின் சிறப்பம்சம் என்னவெனில், மன அழுத்தமாக உள்ள பெண்களின் விருப்பத்திற்கு ஏற்ப, பாய் ஃபிரெண்டை தேர்வு செய்துகொள்ளலாம். 

 

அதாவது, இது முழுக்க முழுக்க பெண்களின் மன அழுத்தத்தை தீர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. தனிமையிலோ அல்லது மன அழுத்தத்திலோ வாடும் பெண்கள், தங்களது பிரச்னையை மனம் விட்டு பேசவும், பிடித்த துணையை தேர்ந்தெடுத்து, அவர்களிடம் இருந்து கவுன்சலிங் பெறவும் உதவக்கூடியதாக, இந்த ஆப் செயல்பாடு உள்ளது. 

 

அதேசமயம், இது டேட்டிங் போன்ற விசயங்களுக்காக உருவாக்கப்படவில்லை என, குஷால் பிரகாஷ் திட்டவட்டமாக மறுத்துள்ளார். 

 

இதுபற்றி மேலும் அவர் கூறுகையில், ‘’பெண்களின் பாதுகாப்பு பற்றி பல்வேறு சோதனைகள் வைத்தபிறகே, இந்த ஆப்பில் ஆண்களை பாய்ஃபிரெண்டாக பணிபுரிய அனுமதிக்கிறோம். 20 முதல் 25 வயது வரை உள்ள ஆண்களுக்கு மட்டுமே இதில் அனுமதி. அத்துடன், கல்லூரி மற்றும் வேலைக்குச் செல்லும் ஆண்களுக்கு பார்ட் டைம் வேலை போல இது நல்ல பலன் தருகிறது,’’ என்றும் குறிப்பிட்டுள்ளார். 

 

மாறிவரும் சமூக கலாசாரம் மற்றும் ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களின் வரவால், பாய்ஃபிரெண்ட்களுக்கான தேவை பெண்களிடையே படிப்படியாக குறைந்து வருகிறது. மேலும், ரோபாட்கள், செக்ஸ் டாய்ஸ், ஃபோன் செக்ஸ் போன்றவற்றின் வரவும் அதிகரித்துக் காணப்படுகிறது.

 

  இந்நிலையில், மும்பை இளைஞரின் பாய்ஃபிரெண்ட் வாடகைக்கு விடும் சேவை எந்தளவுக்கு வெற்றிபெறும் என வியப்பாக உள்ளது.