அக்கா..! பீப் வார்த்தை..! எவனுக்கு பண்ணிகிட்டு இருக்க..? சின்மயியிடம் கேட்க கூடாத கேள்வி..! அதற்கு அவர்..?

விஜய் ரசிகர் ஒருவர் தன்னை திட்டி டிவிட் போட்டதை பாடகி சின்மயி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.


தமிழ் சினிமாவின் பிரபல பாடகியாக வலம் வருபவர் சின்மயி. இவர் பாடகி என்று பிரபலமானதைவிட பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றத்திற்கு குரல் கொடுக்கும் பெண்ணாகத் தான் பலருக்கும் அறிமுகம் என்று தான் கூற வேண்டும். மீட்டு மூலம் தான் இவர் அதிகம் பிரபலமானார் என்றே கூறலாம். இவர் வைரமுத்துவின் மீது சுமத்திய குற்றச்சாட்டுக்கள் கடந்த சில ஆண்டுகளாகவே பிரபலமாக பேசப்பட்டு வருகிறது. இப்பொழுதுதான் இந்த மீட்டு விவகாரம் சற்று ஒய்ந்து உள்ளது என்றுதான் கூற வேண்டும்.

பொதுவாகவே சின்மயி சமூகவலைதளங்களில் எப்பொழுது இருக்கக்கூடிய நபராவார். இந்நிலையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவு சமூக வலைத்தளத்தில் வைரலாக பேசப்பட்டு வருகிறது. அதாவது சின்மயி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் நெட்டிசன் குறிப்பிட்டு கூறியிருக்கிறார். அதாவது விஜய் ரசிகரான ஒருவர் பாடகி சின்மயின் ட்விட்டர் பக்கத்தில், நீங்கள் ஒரு சிறந்த பிளேபேக் சிங்கர் என்று கூறியிருக்கிறார். உங்களுடைய குரல் எனக்கு மிகவும் பிடிக்கும் என்றும் கூறிய அவருக்கு சினிமா இடமிருந்து எந்த ஒரு ரிப்ளையும் வராததால் உடனே அவர் ப்ளீஸ் ரிப்ளை அக்கா என்று பதிவிட்டிருக்கிறார். 

அந்த நெட்டிசன் ரிப்ளை பண்ணுங்க என்று கூறியும் பாடகி சின்மயி ரிப்ளை பண்ணாதால், கோபமடைந்த அவர் கண்டபடி திட்டி பதிவிட்டிருக்கிறார். இதனால் கடுப்பான சின்மயி அதனை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். இதனை பார்த்த நெட்டிசன்கள் நீங்கள் அவரது பதிவுக்கு ரிப்ளை பண்ணி இருக்க வேண்டியதுதானே என்று கூறிவருகின்றனர். தற்போது சின்மயி வெளியிட்டுள்ள இந்த பதிவானது1 சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.