தல அஜித் மற்றும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவும் ஒரே களத்தில் போட்டியிட உள்ளனர்.
ஒத்தைக்கு ஒத்த! தல அஜித்துடன் கெத்தாக மோதும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா!

நடிகை நயன்தாரா அஜித்துடன் இணைந்து பல திரைப்படங்களில் நடித்துள்ளார். கடைசியாக விசுவாசம் திரைப்படத்தில் நடிகர் அஜித்துக்கு ஜோடியாக நடித்திருப்பார்.
தற்போது நடிகர் அஜீத் அவர்கள் நேர்கொண்ட பார்வை என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படமானது. இந்தி சினிமாவில் வெளியான பிங்க் என்ற திரைப்படத்தின் ரீமேக் ஆகும்.
இந்தியில் இந்த திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிகர் அமிதாப் பச்சன் நடித்திருந்தார். தற்போது நேர் கொண்ட பார்வையில் அமிதாப்பச்சனின் ரோலை தான் அஜித் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் நடிகை நயன்தாராவின் நடிப்பில் வெளிவர இருக்கும் திரைப்படம் தான் கொலையுதிர் காலம்.
இந்த திரைப்படத்தை வெளியிட இந்த திரைப்படக்குழுவினர் பலமுறை முயற்சித்தனர் . இதுவரை ஏழு முறை இந்த திரைப்படத்தின் வெளியீட்டு தேதி தள்ளிப் போனது .
கடைசியில் இந்தத் திரைப்படமும் அஜித்தின் நேர்கொண்ட பார்வையும் ஒரே நாளில் அதாவது வரும் ஆகஸ்ட் 8- ம் தேதி வெளியாகும் என அறிவிப்பு வெளிவந்துள்ளது.
இதுவரை ஒன்றாக கலக்கி கொண்டிருந்த அஜித் மற்றும் நயன்தாரா ஜோடி தற்போது இருவேறு துருவங்களாக மாறி திரையரங்கங்களில் எதிர் கொள்ள உள்ளனர்.