நியோடனல் கேர் யூனிட்

தாயின் வயிற்றில் இருந்து வெளிவரும் குழந்தை முழு ஆரோக்கியத்துடன் இல்லாத பட்சத்தில், நியோடனல் கேர் யூனிட்டில் வைத்து கவனிக்கப்படுகிறது. குழந்தையின் வளர்ச்சிக்கு முழுமையாக உதவும் இந்த நியோடனல் கேர் யூனிட்டை தாயின் இன்னொரு கருவறை என்றே சொல்லலாம்.


·         குறைமாதக் குழந்தைகளுக்கு நுரையீரல் வளர்ச்சி முழுமையடையாமல் இருப்பதால் மூலம் மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்படுவது உண்டு.

·         நுரையீரல் முழு வளர்ச்சி அடையும் வரையிலும் ஆக்சிஜன் தெரபி நியோடனல் கேர் யூனிட்டில் கொடுக்கப்படுகிறது.

·         சில குழந்தைகளுக்கு வென்டிலேட்டர் எனப்படும் உயிர் காக்கும் கருவியும் இங்கு இருக்கிறது.

·         மிகவும் எடை குறைந்த குழந்தைகளுக்கு மூளை நரம்புகளில் ரத்தக்கசிவு இருப்பதற்கு வாய்ப்பு உண்டு. இதற்கு நியோடனல் கேர் யூனிட்டில் வைத்துத்தான் சிகிச்சை அளிக்க இயலும்.

இதுதவிர, குறை மாதக் குழந்தைகளுக்கு இதயத்தில் குறை இருக்கவும் வாய்ப்பு உண்டு. பிறக்கும் குழந்தைகளிடம் இருக்கும் அனைத்து குறைபாடுகளையும் நியோடனல் கேர் யூனிட்டில் குழந்தைகளை பாதுகாப்பதன் மூலம் சரிசெய்துவிட முடியும்.