நெஞ்சு சளி நீக்கும் வெற்றிலையை எவ்வாறெல்லாம் உபயோகப்படுத்தலாம் என பாருங்க..

முந்தைய காலங்களில் வெற்றிலை இல்லாத வீடு வெறும் வீடாக கருதப்படும். ஏனெனில் ஜீரணத்துக்கும் சில நோய்களுக்கும் மருந்தாக பயன்படுத்தினார்கள்.


  • வெற்றிலையில் கடுகு எண்ணெய்விட்டு வெதுவெதுப்பாக சூடாக்கி மார்பில் வைத்தால் இருமல், மூச்சுத்திணறல், வலி, வீக்கம் குணமாகும்.    
  • வெற்றிலை சாற்றுடன் சுக்கு, மிளகு, திப்பிலி கலந்து கொடுத்தால் நெஞ்சு சளி குணமாகும். ஆஸ்துமா கட்டுப்படும்.
  • வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு கலந்து மெல்லும்போது மிதமான போதையும் உற்சாக உணர்வும் உண்டாகிறது. மேலும் ஜீரணத்துக்கும் துணை புரியும்.
  • வெற்றிலையை கற்பூரம் கலந்து சூடுசெய்து நெற்றிப்பொட்டில் வைத்தால் தலைவலி விலகும். வெற்றிலையை விஷமுறிவுக்கும் பயன்படுத்தலாம்