அமித் ஷாவை முஸ்லீம்கள் கொலை செய்ய வேண்டும்! நெல்லை கண்ணன் கைது! பெரம்பலூர் தனியார் விடுதியில் போலீசார் அதிரடி!

குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா பற்றி சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்ட பேச்சாளர் நெல்லை கண்ணன் கைது செய்யப்பட்டுள்ளார்.


சமீபத்தில் நெல்லையில் உள்ள மேலபாளையம் பகுதியில் நடைபெற்ற குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய நெல்லை கண்ணன் பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரைப் பற்றி ஒருமையில் பேசியதாக தெரிகிறது. இவரின் சர்ச்சைக்குரிய பேச்சு பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளானது. மேலும் முஸ்லீம்கள் ஏன் இன்னும் அமித் ஷா சோலியை முடிக்கவில்லை என்றும் கேட்டார்.

இதனால் கோபம் அடைந்து பாஜகவினர் நெல்லை கண்ணனை கைது செய்ய வேண்டும் என்று போலீசிடம் புகார் அளித்திருந்தனர். புகாரின் அடிப்படையில் நெல்லை கண்ணனின் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் நெல்லை கண்ணன் நேற்று திடீரென மருத்துவமனையில் உடல் நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்தார். இதனால் போலீசார் அவரை கைது செய்ய தயங்கினர். 

இந்நிலையில் நெல்லை கண்ணனை கைது செய்ய வலியுறுத்தி சென்னை மெரினாவில் பாஜக தேசிய செயலாளர் ஹெச் ராஜா தலைமையில் தர்ணா போராட்டம் நேற்று மாலை நடைபெற்றது. இந்நிலையில் நெல்லை கண்ணன் திருவனந்தபுரம் சென்று விட்டதாக தகவல்கள் வெளியாகியது. இதனால் போலீசார் அவரை வலைவீசி தேடத் தொடங்கினர். 

இந்நிலையில் நேற்று இரவு பெரம்பலூரில் உள்ள ஒரு விடுதியில் நெல்லை கண்ணன் கைது செய்யப்பட்டுள்ளார். மருத்துவர்களின் ஆலோசனை பெற்று நெல்லை கண்ணனிடம் விசாரணை நடத்தப்படும் என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.