திருச்சியில் பணம் கொடுத்து மாட்டிக்கொண்ட நேரு... சி.பி.ஐ. விசாரணை

திருச்சி மேற்கு தொகுதியில் தபால் ஓட்டு போடுவதற்காக போலீஸாருக்கு பணம் கொடுக்கப்பட்ட விவகாரத்தில் நேருவின் பெயர் அடிபடுகிறது. ஆகவே, அவருக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.


மேலும், அதிகாரிகளுக்கு பணம் வழங்கியது தொடர்பான வழக்கு சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது தி.மு.க. பிரமுகர்களை அதிர வைத்துள்ளது. தேர்தல் பணியில் ஈடுபடும் காவலர்களுக்கு தபால் ஓட்டுப் பதிவு சில நாட்களாக நடந்து வருகிறது. இந்நிலையில் திருச்சி மேற்கு தொகுதிக்கு உட்பட்ட போலீஸ் நிலையங்களில் தபால் ஓட்டுகளுக்காக போலீஸாருக்கு திமுக சார்பில் பணம் கொடுக்கப்படுகிறது என்று திருச்சி மேற்குத் தொகுதி அதிமுக வேட்பாளர் பத்மநாதன் மாவட்ட வருவாய் அலுவலரிடம் புகார் அளித்தார்.

இதையடுத்து மேற்குதொகுதிக்கு உட்பட்ட தில்லைநகர், உறையூர், அரசு மருத்துவமனை, எடமலைப்பட்டிபுதூர் உள்ளிட்ட பல்வேறு போலீஸ் நிலையங்களில் இந்த புகாரின் அடிப்படையில் திருச்சி மாநகர போலீஸ் ஆணையர் லோகநாதன் சோதனை நடத்த உத்தரவிட்டார். இந்த அடிப்படையில் போலீஸ் நிலையங்களில் நடந்த சோதனையில் அங்கே உள்ள பீரோக்களில் கவர்களில் பணம் போட்டு வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த விவகாரத்தில் தில்லைநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார், ஏட்டு சுகந்தி, அரசு மருத்துவமனை சப்-இன்ஸ்பெக்டர் மாதரசி ஸ்டெல்லாமேரி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாலாஜி, நுண்ணறிவுபிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் சங்கரன், கலியமூர்த்தி ஆகிய 6 பேரை திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் லோகநாதன் சஸ்பெண்ட் செய்தார்.

மேலும் போலீஸாருக்கு தபால் ஓட்டுக்காக பணம் கொடுக்கப்பட்ட விவகாரத்தில் திமுகவைச் சேர்ந்த வழக்கறிஞர் மணிவண்ண பாரதி உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வக்கீல் திமுக என்பதால் திருச்சி மேற்கு தொகுதி வேட்பாளர் நேருவுக்காகத்தான் போலீஸுக்கு பணம் கொடுக்கப்பட்டதா என்ற சர்ச்சை வெடித்தது. 

இதனை நேரு மறுத்திருந்தாலும், அவர்தான் சிக்குகிரார். ஆகவே, இந்த விவகாரம் இப்போது சி.பி.ஐ.க்கு மாறுதல் செய்யப்பட்டுள்ளது. நேரு சிக்கினால், தேர்தல் ரத்து செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.