தாயாகும் பாக்கியம் இல்லை என்ற டாக்டர்கள்! போராடி 3 குழந்தைகளை பெற்றெடுத்த அம்பானி மனைவி!

தனக்கு குழந்தையை சுமக்கும் பாக்கியம் இல்லை என மருத்துவர்கள் கூறியதாக நீட்டா அம்பானி தெரிவித்துள்ளார்.


ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானியின் மனைவி நீட்டா அம்பானி. இந்த தம்பதிக்கு ஈஷா, ஆகாஷ் மற்றும் ஆனந்த் என மூன்று பிள்ளைகள் உள்ளனர். இவர்களில் இஷாவும் ஆகாசும் வாடகைத் தாய் மூலம் பிறந்த இரட்டை குழந்தைகள். ஆனந்த் மட்டுமே இயற்கையான முறையில் கருத்தரித்து பிரசவிக்கப்பட்டவர்.

இதுகுறித்து பேசியுள்ள நீட்டா அம்பானி, 23 வயதில் தனக்கு திருமணம் ஆன பின்னர் தான் தனக்கு குழந்தை பிறக்காது என்ற அதிர்ச்சித் தகவல் தெரிய வந்ததாக தெரிவித்துள்ளார். பள்ளியில் படிக்கும்போது தாய்மையைப் பற்றி பல கட்டுரைகளை எழுதிய தனக்கு இச்செய்தி கடுமையான சோகத்தை ஏற்படுத்தியதாக அவர் கூறியுள்ளார்.

ஆனால் தனது மருத்துவ தோழியின் உதவியுடன் இரட்டை குழந்தைகளை வாடகைத் தாய் மூலம் பிரசவித்த தாக நீட்டா அம்பானி குறிப்பிட்டுள்ளார். அந்த இரு குழந்தைகள் தான் இஷா மற்றும் ஆகாஷ் என்ற இரட்டையர்கள்.

கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகளுக்கு பிறகுதான் முகேஷ் மற்றும் நீட்டா அம்பானி தம்பதிக்கு குழந்தை பிறந்தது. இதன் பின்னர் இயற்கையான கருத்தரித்தல் முறையில் ஆனந்த் பிறந்தார். தங்களது பிறப்பு பற்றி இஷாவும் மனம் திறந்து பேசியுள்ளார். தனது தாயை புலியுடன் அவர் பெற்றுள்ளார். தங்கள் மேல் மிகவும் அக்கறையுடனும் கடினமாகவும் தாய் நீட்டா நடந்து கொள்வார் என இசா மனம் திறந்துள்ளார்.