நாளைய தினம் இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் நிலவ உள்ளதை அடுத்து அந்த கிரகணத்திற்கு அமெரிக்காவை சார்ந்த நாசா "ஓநாய் சந்திர கிரகணம்" என்று பெயரிட்டுள்ளது.
நாளை ஓநாய் சந்திர கிரகணம்..! வெறும் கண்களால் நிலவை பார்க்கலாமா? பார்த்தால் என்ன ஆகும்?

விண்வெளியைப் பற்றி ஆச்சரியப்படக் கூடிய படைப்புகளில் ஒன்றானது கிரகணங்கள். இதில் சூரிய கிரகணம் , சந்திரகிரகணம் என இரு வகையான கிரகணங்கள் தோன்றுவது வழக்கம் . கடந்த சில நாட்களுக்கு முன்பாக இந்தியாவில் தோன்றிய சூரிய கிரகணத்தை பலரும் ரசித்தனர். அதேபோல் நாளைய தினம் இந்த ஆண்டில் முதலாவதாக சந்திர கிரகணம் தோன்ற உள்ளது.
இந்த ஆண்டில் மட்டுமே நான்கு சந்திர கிரகணங்கள் நடைபெற உள்ளது . அதில் முதலாவது சந்திர கிரகணத்தின் பெயர் ஓநாய் சந்திர கிரகணம் என்று அமெரிக்காவின் விண்வெளி மையமான நாசா அறிவித்து இருக்கிறது. நிலவுக்கும் சந்திரனுக்கும் இடையே பூமி கடக்கும் பொழுது உருவாக்குவதுதான் சந்திரகிரகணம்.
சந்திர கிரகணம் (lunar eclipse) என்பது கதிரவ ஒளியால் ஏற்படும் புவியின் நிழலிற்குள் நிலவு கடந்து செல்லும் போது நிகழ்கிறது. இது கதிரவன், புவி மற்றும் நிலவு ஆகிய மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் சந்திக்கும் பொழுது நிகழக்கூடியது ஆகும். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான முதல் சந்திர கிரகணம் நாளைய தினம் சுமார் 10: 37 மணி அளவில் துவங்கி மறுநாள் அதிகாலை இரண்டு 42 மணி வரை நீடிக்க உள்ளது.
இதனை இந்தியா , ஆப்பிரிக்கா, ஆசியா , ஐரோப்பா நாடுகளில் உள்ள அனைத்து இடங்களிலும் காண இயலும்.
அதுமட்டுமில்லாமல் இந்த கிரகணத்தை அனைவரும் வெறும் கண்களாலேயே பார்க்கலாம் எனவும் நாசா அறிவித்துள்ளது.
இந்த கிரகணத்தை பார்ப்பதற்காக புதுச்சேரியில் மக்கள் வருவதற்கான முன் ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.