கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்! ஆளை மாற்றிய நயன்தாரா! அதிர்ச்சியில் குடும்பத்தினர்!

இந்த ஆண்டும் நடிகை நயன்தாரா குடும்பத்துடன் கிறிஸ்துமசை கொண்டாடாமல் தனக்கு பிடித்த நபருடன் கொண்டாடியது அவரது குடும்பத்தினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.


நடிகை நயன்தாரா ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸ் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடுவது வழக்கம். கேரள கிறிஸ்தவரான நயன்தாராவின் உண்மையான பெயர் டயானா குரியன். கிறிஸ்துமஸ் நெருங்கும் போதெல்லாம் தனது சொந்த ஊரான கேரளாவிற்கு சென்று அங்கு குடும்பத்துடன் கொண்டாடுவது தான் நயன்தாராவின் வழக்கம்.

  சிம்பு, பிரபுதேவா போன்றோரை காதலித்துக் கொண்டிருந்த போதும் கூட கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் என்றால் கேரளா செல்வது தான் நயன்தாராவின் வாடிக்கை. அதாவது கிறிஸ்துமசின் போது குடும்பத்தினருடன் இருக்கவே நயன்தாராவுக்கு பிடிக்கும். ஆனால் கடந்த ஆண்டு முதல் தனது கிறிஸ்துமஸ் கொண்டாட்ட முறையை நடிகை நயன்தாரா மாற்றிக் கொண்டார்.

   அதாவது கேரளா சென்று தனது குடும்பத்துடன் கிறிஸ்துமஸ் கொண்டாடுவதை 2016ம் ஆண்டுடன் நயன்தாரா முடித்துக் கொண்டார். கடந்த ஆண்டு தனது காதலன் விக்னேஷ் சிவனுடன் சென்னையில் கிறிஸ்துமசை கொண்டாடினார் நயன்தாரா. அந்த புகைப்படங்களை மறுநாள் ட்விட்டரில் வெளியிட்டு தான் விக்னேஷ் சிவனை காதலிப்பதையும் வெளிப்படையாக கூறினார்.

   அந்த வகையில் இந்த ஆண்டு மீண்டும் கேரளா வந்து கிறிஸ்துசை கொண்டாட வேண்டும் என்று நயனுக்கு அவரது பெற்றோர் அழைப்பு விடுத்திருந்தனர். ஆனால் நயன்தாரா இந்த முறையும் தனது கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை சென்னையிலேயே வைத்துக் கொண்டார். மேலும் விக்னேஷ் சிவனுடன் தான் இந்த ஆண்டும் நயன்தாரா கிறிஸ்துமசை கொண்டாடியுள்ளார். அந்த புகைப்படங்களையும் நயன்தாரா வெளியிட்டுள்ளார்.

   இதனால் இந்த முறையாவது ஆளை மாற்றாமல் தங்களுடன் வந்து கிறிஸ்துமசை  கொண்டாடுவார் என்று எதிர்பார்த்திருந்த நயன்தாரா குடும்பத்தினர் ஏமாற்றத்தில் உள்ளனர். இதனிடையே நயன்தாரா விக்னேஷ் சிவனை தனது கணவனாக கருதுவதால் தான் அவருடன் கிறிஸ்துமசை கொண்டாடியதாக ஒரு தரப்பு கிளப்பி விட்டுள்ளது.

   இந்த ஆண்டும் நடிகை நயன்தாரா குடும்பத்துடன் கிறிஸ்துமசை கொண்டாடாமல் தனக்கு பிடித்த நபருடன் கொண்டாடியது அவரது குடும்பத்தினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அதே சமயம் இரண்டு ஆண்டாக ஒரே நபருடன் நயன்தாரா கிறிஸ்துமஸ் கொண்டாடியிருப்பது அவரது குடும்பத்தினரை சற்று நிம்மதி அடைய வைத்துள்ளது. அதே நபருடன் நயன்தாரா ஆயுள் முழுவதும் கிறிஸ்துமஸ் கொண்டாட வேண்டும் என்றும் அவர்கள் பிரார்த்தனை செய்ய ஆரம்பித்துள்ளனர்.