திருமணத்திற்கு இடம் தேடும் நயன்தாரா! வெளிநாட்டில் மணப்பெண் ஆக முடிவு!

இயக்குனர் விக்னேஷ் சிவனும் நடிகை நயன்தாராவும் இந்த வருடத்தின் இறுதியில் திருமணம் செய்து கொள்ள போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


கடந்த 2013 ஆம் ஆண்டு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளிவந்த நானும் ரவுடிதான் திரைப்படத்தில் நடிகை நயன்தாரா கதாநாயகியாக நடித்திருந்தார். இந்த திரைப்படத்தின் மூலம் இவர்களுக்கு இடையே உருவான நட்பு நாளடைவில் காதலாக மாறியது.

திரைப்பட விழாக்கள் மற்றும் விருது வழங்கும் விழாக்களில் இவர்கள் இருவரும் ஒன்றாக சேர்ந்தே கலந்து கொண்டு வருகின்றனர் . இந்நிலையில் நடிகை நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் இந்த வருட இறுதிக்குள் திருமணம் செய்து கொள்ள போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது .

மேலும் இவர்கள் திருமணத்தை வெளிநாட்டில் செய்து கொள்ள போவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது .நடிகை நயன்தாரா தற்போது விஜய்யுடன் பிகில் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தர்பார் திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.