சீரியலில் தான் குடும்ப குத்துவிளக்கு..! பாத்ரூம்க்கு உள்ள போனா? நாயகி நடிகையின் ஏடா கூட புகைப்படம்..!

நாயகி சீரியல் ஹீரோயின் வித்யா பிரதீப் கவர்ச்சி உடை அணிந்து பாத்ரூமில் படுத்துக் கொண்டிருக்கும் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.


தமிழ்சினிமாவில் இயக்குனர் விஜய் இயக்கத்தில் வெளியான சைவம் திரைப்படத்தின் வாயிலாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை வித்யா பிரதீப் ஆவார். கேரளாவில் உள்ள ஆலப்புழாவை பூர்வீகமாக கொண்ட இவர் தன்னுடைய கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு சென்னையில் உள்ள கண் மருத்துவமனையில் ஆராய்ச்சியாளராக பணிபுரிந்து வருகிறார். இதற்கிடையில் அவருக்கு மாடலிங் துறையில் அதிக ஆர்வம் இருப்பதால் மாடலிங் செய்து வந்தார் நடிகை வித்யா பிரதீப். 

மேலும் இவர் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் விளம்பரப் படங்கள் பலவற்றில் நடித்திருக்கிறார். தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நாயகி மெகா தொடரில் கதாநாயகியாக நடித்து பட்டிதொட்டியெங்கும் பிரபலமான நடிகையாக வலம் வருகிறார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான தடம் திரைப்படத்தில் இவர் போலீஸ் கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தார். இந்தத் திரைப்படம் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அங்கீகாரத்தை பெற்றுத் தந்தது.

ஊரடங்கு உத்தரவால் சினிமா மற்றும் சீரியல்கள் படப்பிடிப்புகள் ஆகியவை ரத்து செய்யப்பட்டு நடிகர் நடிகைகள் தங்களுடைய வீடுகளிலேயே முடங்கி உள்ளனர். அந்த வகையில் நடிகை வித்யா பிரதீப்பும் தன்னுடைய வீட்டில் தொடங்கியிருக்கிறார். சமூக வலைத்தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் நடிகை வித்யா பிரதீப் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

அதாவது நடிகை வித்யா பிரதீப் வெளியிட்டுள்ள அந்த புகைப்படத்தில் கவர்ச்சிகரமான உடையை அணிந்துகொண்டு பாத்ரூம் டப்பில் படுத்துக் கொண்டிருக்கிறார். தற்போது நடிகை வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அசந்து போயுள்ளனர். நடிகை வித்யா பிரதீப்பா இது ? என பலரும் ஆச்சரியத்தில் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.