ரஜினியின் வில்லன் நடிகரின் அண்ணனால் தம்பி மனைவிக்கு கொடுக்கப்பட்ட உடல் ரீதியிலான டார்ச்சர்..! பிறகு எடுத்த முடிவு!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பேட்ட திரைப்படத்தில் வில்லனாக நடித்த நவாசுதீன் சித்திக்கின் மனைவி, தன் கணவரின் அண்ணன் உடல்ரீதியாக டார்ச்சர் செய்ததால் விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார்.


பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நவாசுதீன் சித்திக். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட திரைப்படத்தில் வில்லனாக நடித்திருந்தார். இவரது இரண்டாவது மனைவியான ஆலியா தற்போது தன் கணவரிடமிருந்து விவாகரத்து வேண்டும் என்பதற்காக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார். நடிகர் நவாசுதின் ஏற்கனவே ஷீபா என்ற பெண்ணைத் திருமணம் செய்துகொண்டு விவாகரத்து செய்து இருக்கிறார். இதனைத்தொடர்ந்து ஆலியாவை காதலித்து இரண்டாவதாக கடந்த 2009ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் திருமணமாகி இரண்டு குழந்தைகளும் உள்ளனர். 

கடந்த 2017 ஆம் ஆண்டே இவர்கள் இருவருக்கும் இடையில் பிரச்சினைகள் இருப்பதாகவும் அவர்கள் பிரிந்து விட்டதாகவும் கூறப்பட்டது. பின்னர் இருவரும் மனம் திறந்து பேசி சேர்ந்து வாழ ஆரம்பித்தனர். ஆனால் தற்போது திடீரென்று இவர்களது குடும்ப வாழ்க்கை விவாகரத்தை நோக்கி சென்றுள்ளது. இதனை அடுத்து ஆலியா தன்னுடைய விவாகரத்து நோட்டீசை வழக்கறிஞர் மூலமாக கடந்த 7ஆம் தேதி இமெயில் மற்றும் வாட்ஸ்அப் வழியாக நவாசுதீன் சித்திக்கிற்கு அனுப்பியுள்ளனர். ஆனால் அதற்கு நடிகர் நவாசுதீன் எந்த ஒரு பதிலும் அளிக்கவில்லையாம்.

இதற்கிடையில் அவர் ரம்ஜான் பண்டிகையை கொண்டாடுவதற்காக உத்தரபிரதேச மாநிலம் முஸாபர்நகரில் உள்ள தனது சொந்த ஊரான, புத்தானாவுக்கு தன்னுடைய குடும்பத்தினருடன் கடந்த 11ம் தேதி சென்றுள்ளார். இன்னிலையில் ஆலியா விவாகரத்துக்கான காரணத்தை வெளியிட்டிருக்கிறார். அதாவது இதுவரை தனது கணவர் நவாசுதீன் என்னை அடிப்பதற்காக கை ஓங்கியது கிடையாது என்று அவர் கூறியிருக்கிறார். ஆனால் அவர் அண்ணன் தன்னை அடித்து துன்புறுத்தியதாக அவர் குற்றம் சாட்டியிருக்கிறார். இதுவரை நான் அவரிடமிருந்து பெறாதது அது மட்டும் தான் என்றும் அவர் கூறியிருக்கிறார். ஆனால் அவரது குடும்பத்தினர் என்னை மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் சித்திரவதை செய்துள்ளனர். அவரது தாயும் சகோதர சகோதரிகளும் எங்களுடன் மும்பையில் தங்கியிருந்தார்கள்.

என்னை தொடர்ந்து அவர்கள் அனைவரும் சேர்ந்து துன்புறுத்தி வந்தனர். பல ஆண்டு காலமாக இதனை மறைத்து அவர்களோடு இணைந்து வாழ்ந்து வந்தேன். இதே காரணத்துக்காகத்தான் நவாசுதின் முதல் மனைவியும் அவரை விட்டு பிரிந்தார் என்று அவர் கூறியிருக்கிறார். இது ஒன்றும் அவர்களது குடும்பத்திற்கு முதல் விவாகரத்து அல்ல. இது அவர்களது குடும்பத்தில் நடக்கும் ஐந்தாவது விவாகரத்து ஆகும். மேலும் பேசிய ஆறிய கடந்த சில மாதங்களாக தன்னுடைய குழந்தைகளை கூட நவாசுதீன் பார்க்க வரவில்லை என்று கூறியிருக்கிறார். மேலும் குழந்தைகளும் தங்களுடைய அப்பா இல்லாமல் பழகி விட்டதாகவும் அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. இவர்களது விவாகரத்து செய்தியானது பாலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.