திமுகவின் முதல் வேட்பாளர் நவாஸ் கனி - பசையுள்ள பார்ட்டியாம்! எந்த தொகுதி தெரியுமா?

காலம் காலமாக தி.மு.க. கூட்டணியில் ஒற்றை இலக்க கூட்டணி என்றால் அது முஸ்லீம் லீக் மட்டும்தான்.


இந்த 2019 நாடாளுமன்றத்தேர்தலில் களம் இறங்க காதர் மொய்தீன் அத்தனை ஆர்வம் காட்டவில்லை. காரணம் என்னவென்றால், அய்யாவுக்கு வயசாகிவிட்டது என்கிறார்.

ஆம், 80 வயதைத் தாண்டிவிட்டதால் தேர்தல் பிரசாரத்துக்காக தெருதெருவாக அலைய முடியாது என்று சொல்லிவிட்டாராம். அதனால் காதர் மொய்தீனுக்குப் பதிலாக நவாஸ்கனிக்கு சீட் கொடுக்கப்படும் என்று தெரியவந்துள்ளது.

இந்த நவாஸ்கனி யாரென்றால் எஸ்.டி. கொரியர் நிறுவனத்தின் முதலாளி. ஆக, துட்டுக்குத்துட்டும் ஆச்சு, முஸ்லீமுக்கு முஸ்லீமும் ஆச்சு.

வேலூர் தொகுதி கேட்கப்பட்ட நிலையில், நவாஸ் கனிக்காக ராமநாதபுரம் தொகுதி கொடுக்கப்படுவதாக தெரிகிறது. இதுகுறித்து இன்று கேரளா விழாவில் கலந்துகொண்ட காதர் மொய்தீன் தகவல் தெரிவித்து இருக்கிறார்.

கூட்டணி கட்சிக்கு துட்டு தர்றது பழைய ஸ்டைல், அங்கேயும் பசையுள்ள பார்ட்டியை நிறுத்து துட்டு வசூல் செய்றது புது ஸ்டைல். அதுல தி.மு.க. கிங் என்கிறார்கள்.

ஆமாங்க... ஸ்டாலின்னா சும்மாவா என்று அறிவாலயம் தரப்பு கொக்கரிக்கிறார்கள்.