முழங்கை மட்டும் கருப்பாக இருக்கிறதா..? சரியாக்கலாம் வாங்க…

என்னதான் அழகுக்காக மெனக்கெட்டாலும் சிலருக்கு முழங்கை மட்டும் கருப்பாகவே இருக்கும். ஆரம்பத்திலேயே இதனை கவனிக்கவில்லை என்பதுதான் இதற்குக் காரணம். ஆனாலும், பரவாயில்லை, இப்போது சரி செய்யலாம்.


தினமும் எலுமிச்சம் பழ மூடியில் முழங்கைகளை பத்து நிமிடங்கள் தேய்த்து ஊறிக் கழுவி வரலாம். சிறிதளவு தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் தேய்த்து, ஊறவைத்து நன்றாக ஸ்க்ரப் கொண்டு தேய்ப்பதும் பலன் தரும்.

பயத்தம்பருப்பு ஊறவைத்து அரைத்து பற்று போடுதல், ஆரஞ்சு பழத் தோல் காயவைத்து அரைத்து பூசுதல் போன்றவை நல்ல பலன் தருகிறது.

சொரசொரப்பை அகற்றுவதற்காக மருந்துகள் ஏதேனும் போடும்போது, தோல் உரிந்து விகாரமாகிவிடலாம். ஆகவே, நிதானமாகவே இதனை சரிசெய்ய வேண்டும்.

 இவை தவிர, உடலில் கொழுப்பு சோராதபடி முறையான உணவுப் பழக்கத்தை மேற்கொள்வதன் மூலம் கைகளிலும் கொழுப்பு சேராதபடி அழகாக வைத்துக் கொள்ள முடியும்.