மாயாவதி கட்சித் தலைவருக்கு செறுப்பு மாலை! கழுதையில் ஏற்றி அனுப்பிய விபரீதம்! அதிர்ச்சி காரணம்!

ராஜஸ்தான் மாநிலத்தில் பகுஜன் சமாஜ்வாடி முக்கிய உறுப்பினர்களுக்கு சொந்த கட்சியினரே செருப்பு மாலை அணிவித்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


பகுஜன் சமாஜ்வாடி கட்சியின் முன்னாள் ராஜஸ்தான் மாநில தலைவரான சீதாராமும்,  அக்கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரான ராம்ஜி கௌதம் ஆகியோர் நேற்று தலைநகர் ஜெய்ப்பூருக்கு வந்துள்ளனர். அப்போது அக்கட்சி தொண்டர்கள் இருவரையும் சுற்றி வளைத்தனர்.

யாரும் எதிர்பாராத வகையில் இருவரும் கழுத்தில் செருப்பு மாலையை அனிவித்தனர். மேலும் இருவரின் முகங்களும் கருப்பு மையை பூசி, அவர்களை கழுதையில் ஏற்றி சென்றனர். 

இதுகுறித்து பகுஜன் சமாஜ்வாதி கட்சித் தொண்டர்களுடன் விசாரித்தபோது, சொந்த கட்சிக்கு எதிரான செயல்களில் ஈடுபட்ட காரணத்தினால் இருவருக்கும் இவ்வாறு தண்டனை வழங்கப்பட்டது என்று கூறியுள்ளனர்.

ராஜஸ்தான் மாநிலத்தில் சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்த 6 பகுஜன் சமாஜ்வாதி கட்சியினர் செப்டம்பர் மாதத்தில் காங்கிரஸ் கட்சிக்கு தாவினர். அப்போது கூட்டப்பட்டிருந்த பகுஜன் சமாஜ்வாடி கட்சியின் பொதுக்குழுவை தலைவர் மாயாவதி கலைத்தனர். மேலும் மாநில தலைவராக பணியாற்றிவந்த சீதாராமனை மாயாவதி அந்த பதவியிலிருந்து நீக்கினார். அப்போது ராம்ஜி கௌதமை தேசிய ஒருங்கினைப்பாளராக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவமானது ராஜஸ்தான் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.