சாலையோரம் வீசப்பட்ட நம் தேசியக் கொடி! அதை எடுத்து இளம் காவலன் செய்த நெகிழ வைக்கும் செயல்!

சாலையோரத்தில் வீசப்பட்டு இருந்த தேசியக்கொடியை பாதுகாத்த காவல்துறை அதிகாரி பாராட்டப்பட்டுள்ள சம்பவமானது கடலூரில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.


சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் 20-ஆம் தேதியன்று கடலூர் மாவட்டத்திலுள்ள காட்டுமன்னார்கோவில் அருகே அமைந்துள்ள லால்பேட்டையில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டததில் தேசியக்கொடி சாலையோரத்தில் வீசப்பட்டிருந்தது

போராட்டம் முடிந்த பின்னர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த தமிழ்நாடு சிறப்பு காவல் 10-வது அணியை சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் உடனடியாக தேசிய கொடியை எடுத்து பாதுகாத்தார். இந்த சம்பவத்தை யாரோ வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தனர்.

இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து சென்னை மாவட்ட காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் கார்த்திகேயனை நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி அளித்துள்ளார்.இந்த பாராட்டு நிகழ்ச்சியின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.