உணவுக்காக குப்பைத் தொட்டியை கிளறிய பெண் இன்று அமெரிக்காவின் பெரும் கோடீஸ்வரி! எப்படி தெரியுமா?

அமெரிக்காவில் சிறு வயதில் உண்ண உணவு கூட இன்றி நாடோடியாகத் திரிந்த பெண் கடின உழைப்பால் 1800 கோடி டாலருக்கு அதிபதியான கதை பலருக்கும் முன்னுதாரணமாக விளங்குகிறது.


சோபியா அமாருசோ என்பவர் தனது ஒன்பதாவது வயதிலேயே வாழ்க்கையின் போராட்டங்களை எதிர்கொள்ள தயாராகி விட்டார் 1984 ஆம் ஆண்டு பிறந்த சோபியா கவனக்குறைவு மற்றும் மனச் சோர்வு காரணமாக பள்ளியில் இருந்து வெளியேற்றப்பட்டார். அந்த நேரத்தில் அவரது பெற்றோரும் வேலை இல்லாமல் இருந்ததால் நிலைமை மிகவும் மோசமாக இருந்தது 

உண்ண உணவு கூட இன்றி கடற்கரையோரத்தில் சுற்றித் திரிந்த அவர் குப்பைத் தொட்டியில் கிடந்த உணவை எடுத்து உண்ணும் நிலைமைகளையும் எதிர்கொண்டு வாழ்ந்தார். இந்நிலையில் வயிற்றுப்பிழைப்புக்காக கடை ஒன்றை தொடங்கிய சோபியா 22 வயதுக்குள் பல்வேறு வேலைகளைச் செய்தார்.

2003 ஆம் ஆண்டில் வாய்ப்புகள் ஏதும் கிடைக்காமல் ஒருமுறை திருடிய சோபியா கைது செய்யப்பட்டார். இந்நிலையில் வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கான ஏதாவது ஒரு பாதையை எதிர்பார்த்து காத்திருந்த சோபியாவுக்கு டிஜிட்டல் உலகம் கை கொடுத்தது. 

ஈபேஇயில் நாஸ்டி கல் என்ற பெயரில் ஒரு துணிக் கடையைத் தொடங்கினார். எட்டு டாலருக்கு வாங்கிய ஆடைகளை அதில் ஆயிரம் டாலர் வரை விலை வைத்து விற்றார். அதற்காக அந்த ஆடைகளை அணிந்து புகைப்படம் எடுத்து அவர் விளம்பரம் செய்து வந்தார்.

இந்நிலையில் அவர் அளவுக்கு அதிகமாக விளம்பரம் செய்வதாகக் கூறி ஈபே அவரை இணைய வர்த்தகத்தில் இருந்து வெளியேற்றியது. இதையடுத்து தனது பணியாளர்களின் துணையுடன் அவர் சில்லறை வர்த்தகக் கடை ஒன்றை தொடங்கினார். ஈபேயில் ஏற்கனவே பிரபலமாகி இருந்ததால் அவருக்கு விரைவிலேயே முதலீட்டாளர்கள் கிடைக்கத் தொடங்கினர். 

முதலீட்டாளர்கள் 49 மில்லியன் டாலர் முதலீடு செய்த நிலையில் விரைவிலேயே அதை 280 மில்லியன் டாலராக உயர்த்திய அவர் 2012ஆம் ஆண்டு 1800 மில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் போர்ப்ஸ் பத்திரிக்கையின் அமெரிக்காவின் கோடீஸ்வர மகளிர் பட்டியலில் இடம்பிடித்தார் 

இவர் தனது தொழிலை மட்டும் கவனிக்காமல் பெண்கள் தொழில் தொடங்கினால் லாபத்திற்கான வழிவகைகள் தொடர்பாகவும் ஆலோசனை வழங்கி வருகிறார்.