மீண்டும் பிரதமர் ஆவாரா மோடி? பிரபல ஜோதிடரின் அசத்தல் கணிப்பு!!

தலைசிறந்த நிர்வாகி என்ற இமேஜுடன் கடந்த தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி மோடியை களம் இறக்கியது.


மோடி ஆட்சிக்கு வந்தால் பாகிஸ்தான் பயப்படும், சீனா ஒளிந்துகொள்ளும், மோசடி செய்பவர்கள் தண்டிக்கப்படுவார்கள், இந்தியா வல்லரசாகும், கள்ளப்பணம் வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்குக் கொண்டுவரப்படும், ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் பணம் கிடைக்கும் என்றெல்லாம் பிரசாரம் செய்யப்பட்டது அதனை நம்பி மக்கள் வாக்களித்தார்கள். மோடியும் பிரதமர் ஆனார்.

 

கள்ளப்பணம் ஒழிப்பதற்காக கொண்டுவந்த பண மதிப்பிழப்பு நடவடிக்கை அவருக்குத் தோல்வியைத் தந்தது. ஜி.எஸ்.டி. சிறு மற்றும் குறு தொழிலதிபர்கள் மத்தியில் பெரும் அவநம்பிக்கையை விதைத்தது. ஆனாலும் இன்னமும் நம்பிக்கைக்குரிய தலைவராக மோடி மட்டுமே கண்ணுக்குத் தெரிகிறார். அவர் மீது தனிப்பட்ட முறையில் எந்த ஊழல் குற்றச்சாட்டும் இல்லை.

 

இந்த நிலையில், வருகிற மே மாதம் 2019. ல் நடக்க இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் ஆட்சியை பிடிப்பது யார் என்பதை ஜோதிட ரீதியாக ஆய்வு மேற்கொண்டோம்.  

 

கடந்த தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியின் எதிர்ப்பு அலையை தனக்கே சாதகமாக பயன்படுத்தி கொண்டார்.  இம்முறை மோடியின் ஆட்சி நடத்திய விதம் மோடிக்கே சற்று எதிர்ப்பு அலை சிறிது இருந்தாலும்  இதனை சமாளித்து ஆட்சியை மீண்டும் தக்க வைத்து கொள்வாரா என்பதை அவரது ஜாதகத்தை பார்ப்போம்.

 

1. நரேந்திர மோடி விருச்சிக ராசி விருச்சிக லக்னம் அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்

2. இவர்க்கு தற்போது சந்திர திசை 1-10 - 2021 நடக்க உள்ளது.தற்போது கேது புக்தி 1-8 - 2019 வரை உள்ளது. இதன் தொடர்ச்சி.சுக்ரன் சூரிய புக்தி நடக்க உள்ளது.

3.ஒரு நாட்டையே கட்டி அரசயாள மிகப் பெரிய ராஜ யோகங்கள் வேண்டும் அவ்வாறு மிக பெரிய ராஜ யோகம் என்று கூறும் அளவில் ஒன்றும் இல்லையென்றாலும் செவ்வாய் கிரகம் ஆட்சி புதன் ஆட்சி உச்ச ஸ்தானத்தில் உள்ளது.


4. ராஜாங்க கிரகமாக இருக்கும் சூரியன் செவ்வாய் குரு, சனி இவர்களின் நிலையை பார்க்கும் போது சூரியன் செவ்வாய் குரு நல்ல நிலையில் இருக்கிறார்கள் சனி பகை ராசியிலும் பகை கிரக நட்சத்திர பாதத்தில் நின்று இருக்கிறது

5. பொது ஜனவசியம் பற்றி கூறும் கிரகம் சந்திரன் நீசம் பெற்று இருந்தாலும் இவர்க்கு நீசபங்க ராஜ யோகமாக உள்ளது. என்றாலும் நீசம் நீசமே சந்திரன் நீசம் என்பதால் பொது ஜன மக்களிடம் நீடித்த நற்பெயர் எடுக்க முடியாமல் போகும்

6. சனி கிரகம் பகை என்பதால் அடித்தட்டு மக்களின் கோபத்திற்கு ஆளாக் கூடும்.


7 அரசியலில் ராஜ தந்திதிர கிரகமாக இருக்கும் சூரியன் புதன் நல்ல நிலையில் இருந்தாலும் உடன் இருக்கும் கேது தடைகளையும் எதிர்மாறான நிகழ்வை உருவாக்குவார்.

8 . அரசியல் வெற்றிக்குரிய பாவமாக கருதப்படும் லக்னம், 5, 9, 11, ஆகிய பாவங்களின் அதிபதிகளின் தரக்கூடிய பலன்களின் படியே இவர் அரசியலில் வெற்றி வெற்றி பெற்று பிரதமர் பதவியை அடைந்தார்

9.இவர்க்கு கடந்த 20 வருட காலமாக தொடர்ச்சி வந்த திசைகளின் ஆதரவால் அரசியல் புகழ் பதவி அடைந்தார்.

       

இனி நரேந்திர மோடி இனி வரும் காலங்களி்ல் சந்திர திசை செவ்வாய் திசை மத்திம பலனையே தரும். மேலும் தற்போது ஏழரைச் சனி கழிவு பகுதியில் உள்ளது. மேலும் குருவும் சாதக நிலையில் இல்லை ஏழரைச் சனி காலத்தில் பெரிய பதவியில் இருந்ததால் சனி முடியும் காலத்தில் பதவியை இழக்க செய்து விடுவார்.


இந்த நிலையில் இவரது ஜாதகத்தை மட்டும் வைத்து பிரதமர் யோகத்தைக் கணிப்பது சரியாக வராது. அதனால், அடுத்து ராகுல் காந்தியின் ஜாதகத்தைக் கணித்து அதன்பிறகு முடிவை சொல்வதே சரியாக இருக்கும். அதனால் அடுத்த பதவில் ராகுல் காந்தி ஜாதகத்தைப் பார்க்கலாம்.    

 

 

வெளியீடு :

இறையருள் ஜோதிடர்

சூரிய நாராயண மூர்த்தி

இந்திய ஜோதிட ஆய்வு மையம் 

செல் .. 9443923665

 whatsapps: 90809 07727