உலகக்கோப்பை போட்டியில் இருந்து விலகிய நிலையில் ஷிகர் தவான் வெளியிட்ட மனம் உருகிய பதிவிற்கு இந்திய நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பதிலளித்துள்ளார்.
கண்கலங்கிய ஷிகர் தவான்! நெகிழ வைத்த பிரதமர் மோடி! எப்படி தெரியுமா?
உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி திறம்பட செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்திய அணியின் நட்சத்திர வீரரான ஷிகர் தவானுக்கு காயம் ஏற்பட்டு அணியிலிருந்து நீக்கப்பட்டார். அவருடைய கைவிரல்கள் அடுத்த மாதம் இறுதி வரை சிகிச்சை பெற வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியதால் இந்த முடிவை எடுத்ததாக தெரிய வருகிறது.
தன்னால் உலகக்கோப்பையில் பங்கேற்க இயலாது என்பதனை மனமுருக வீடியோ ஒன்றின் மூலமாக வெளியிட்டார். வீடியோவின் போது அவர் கண்கள் கலங்கி இருந்தது அவர் இந்திய அணிக்காக விளையாடுவதை எவ்வாறு நேசித்தார் என்பதனை காட்டியது.
உலகில் உள்ள தலைசிறந்த வீரர்களுள் பலர் அவருக்கு ஆறுதல் கூறினர். ஆனால் அனைவரும் ஆச்சரியப்படும்படி நாட்டின் பிரதமரான நரேந்திர மோடி அவர்கள் ஷிகர் தவானுக்கு ஆறுதலாக ட்வீட் ஒன்றை பதிவு செய்துள்ளார்.
அவர் அந்த ட்வீட்டில் "ஆடுகளம் தங்களை மிஸ் செய்யும் என்றும், காயத்திலிருந்து விரைவாக மீண்டு வந்து இந்திய அணிக்கு சிறந்த பங்களிப்பை அளிக்க வேண்டும். அதற்கு நான் எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்" என்று கூறியுள்ளார். https://twitter.com/narendramodi/status/1141697689412726785
இந்தப் பதிவினைப் பார்த்த இந்திய ரசிகர்கள் பலர் பிரதமர் மோடியை பாராட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது