எடப்பாடிக்கு அவர் வீட்டு எருமை கூட ஓட்டுபோடாது! டரியல் ஆக்கிய நாஞ்சில் சம்பத்!

திமுக தலைவர் கருணாநிதியின் 96வது பிறந்த நாள் முன்னிட்டு சென்னை அரும்பாக்கத்தில் திமுக இளைஞரணி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது . இதில் பங்கேற்று நாஞ்சில் சம்பத் பேசினார்.


தமிழர்களின் வாழ்க்கை  வகுப்பு வாதிகளின் கையின் சிக்கி இருப்பதாகவும், இந்தியா என்ற நாட்டில் இன்னோரு நாடு  இருக்கிறது என்றால் அது தமிழ்நாடு தான் என்றார். தமிழகத்தை மத்திய அரசு மாற்றாந்தாய் பிள்ளையாக பார்க்கிறது.

எடப்பாடி முதலமைச்சராக வேண்டுமென்று அவர் வீட்டு எருமை கூட அவருக்கு ஓட்டு போடாது. எடப்பாடி மற்றும் ஓபிஎஸ் மரணம் அடைந்த பிறகு அவர்கள் மேலே சென்றாலும் வெயிட்டிங் லிஸ்டில் தான் இருப்பார்கள். அதாவது காத்திருப்போர் பட்டியலில் தான் இருப்பார்கள்.

தற்போது டெல்லி சென்று அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்க சிவி சண்முகத்தை ஓபிஎஸ்-இபிஎஸ் அனுப்பி வைத்தனர். ஆனால் டெல்லியில் அவர்களை அவமானப்படுத்தி திருப்பிஅனுப்பி வைக்கின்றனர். இது தான் தற்போதைய அதிமுகவின் நிலை எனக் கிண்டலடித்தவர்.

ஜெயலலிதா இருக்கும் போது கூட்டணி சேர கூட்டணி கட்சி தலைவர்கள் வீட்டிற்கு சென்றதில்லை. ஆனால் எடப்பாடி பழனிச்சாமி விஜயகாந்த் வீட்டிற்கு நான்கு முறை சென்று அவரை பார்க்கிறார்.  ஆனால் விஜயகாந்திற்கு வீட்டிற்கு யார் வந்து செல்கிறார்கள் கூட சுயநினைவு இல்லாமல் இருக்கிறார். என மேடையில் நாஞ்சில் சம்பத் பேசினார்.