பிரபல சீரியல் நடிகைக்கு 2வது கணவன் ஆன பிரபல தொழில் அதிபர்! யார் தெரியுமா?

பிரபல நந்தினி சீரியலில் நடித்த சீரியல் நடிகை நித்யா ராமுக்கு வருகிற மாதம் ஆறாம் தேதி திருமணம் நடைபெற உள்ளது.


கடந்த 2015ஆம் ஆண்டு வெளியான முட்டு மனசு என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை நித்யா ராம். இந்த திரைப்படத்திற்கு பிறகு வாய்ப்புகள் சரியாக கிடைக்காத காரணத்தினால் சின்னத்திரையில் தனது நடிப்பைத் தொடர்ந்தார். 

நடிகை நித்யா ராம் கடந்த 2014 ஆம் ஆண்டு வினோத் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இவர்கள் இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர்.

பின்னர் சுந்தர் சி இயக்கத்தில் எடுக்கப்பட்ட நந்தினி சீரியல் மூலம் பட்டி தொட்டியெங்கும் பிரபலம் ஆனார். நடிகை நித்யா ராம் சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் உள்ள தொழிலதிபர் கவுதமை காதலித்து வருவதாகவும் விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளார் எனவும் தகவல்கள் வெளியாகியது.

இந்நிலையில் நடிகை நித்யா ராம் மற்றும் ஆஸ்திரேலியாவில் உள்ள தொழிலதிபர் கௌதம் ஆகிய இருவருக்கும் டிசம்பர் மாதம் ஆறாம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. ஆனால் இந்த திருமணம் காதல் திருமணம் அல்ல என நடிகை நித்யா ராம் கோரியுள்ளார். தொழிலதிபர் கவுதமின் அம்மாவும் எனது அம்மாவும் நெருங்கிய தோழிகள். ஆகவே அவர்களின் விருப்பப்படிதான் நாங்கள் திருமணம் செய்து கொள்கிறோம் என்றும் அவர் கூறியிருந்தார். 

திருமணத்திற்கு பிறகு நடிகை நித்யா கணவருடன் ஆஸ்திரேலியாவில் தங்கி விடும் முடிவில் உள்ளார் எனவும் தெரியவந்துள்ளது. இதனால் இவர் இனி சீரியலில் நடிக்க மாட்டார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. இதை அறிந்த அவரது ரசிகர்கள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.