உங்கள் மனைவியை நீங்கள் இப்படி பார்த்துள்ளீர்களா? தொழில் அதிபருக்கு அவர் பணிப்பெண் அனுப்பிய விவகார புகைப்படம்! ஜவுளிக்கடை அதிர்ச்சி!

முதலாளி மனைவியை ஆபாசமாக சித்தரித்து பணம் கேட்டு மிரட்டிய தம்பதியினர் கைது செய்யப்பட்டிருப்பது நாமக்கல் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


நாமக்கல் மாவட்டத்தில் குமாரபாளையம் எனும் இடம் அமைந்துள்ளது. இங்கு பரணிதரன் என்பவர் பிரபல ஜவுளி கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்த கடையில் சர்மிளா என்ற 21 வயது இளம்பெண் பணியாற்றி வந்தார். இவர் டிக்டாக் மீது அதிவிரைவில் மோகம் கொண்டவர். இவருக்கு தூத்துக்குடியைச் சேர்ந்த சுரேஷ் என்ற 24  வயது நபருடன் நெருக்கம் ஏற்பட்டது.

நெருக்கமானது நாளடைவில் காதலாக மாறியுள்ளது. பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டு 10 மாதங்களுக்கு தூத்துக்குடியில் வசித்து வந்தனர். திருமணம் ஆன பிறகும் சர்மிளா ஜவுளிக்கடை உரிமையாளரான பரணிதரனிடம் செல்போனில் பேசி வந்துள்ளார்.

திடீரென்று ஒரு நாள் பரணிதரனின் மனைவியின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து அவருடைய செல்போனுக்கு ஷர்மிளா அனுப்பியுள்ளார். இந்த புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் வெளியிடாமல் இருப்பதற்கு 40 லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும் என்று மிரட்டியுள்ளார். அதிர்ச்சி அடைந்த பரணிதரன் உடனடியாக அப்பகுதி காவல்நிலையத்தில் புகாரளித்தார். 

புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர் சம்பந்தப்பட்ட தம்பதியை தேடி கண்டுபிடித்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர் அவர்களுடைய செல்போனை சோதித்து பார்த்ததில் பரணிதரன் மனைவி மட்டுமின்றி, பல்வேறு தொழிலதிபர்களின் மனைவியின் ஆபாச புகைப்படங்கள் இருந்துள்ளன. கையும் களவுமாக காவல்துறையினர் அவர்களை கைது செய்து தீவிர விசாரணையில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.