எந்த சான்றிதழ் எடுத்தாலும் ரூ.100! லஞ்சப்பணத்தில் அலுவலகத்தை கூறு போட்டு விற்கும் விஏஓ! வைரல் வீடியோ!

நாமக்கலில் பரமத்தி வேலூர் கிரமாத்திற்கு உட்பட்ட கிராம நிர்வாக அலுவலகத்திற்கு அரசு சான்றிதழ் வங்க வந்தவரிடம் கிராம நிர்வாக அலுவலர் ஒருவர் லஞ்சம் வாங்குவது போன்ற வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.


நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே கிராம நிர்வாக அலுவலம் அமைந்துள்ளது. இங்கு ராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருபவர் முத்தையன். 

இதற்கிடையே, கிராம நிர்வாக அலுவலத்திற்கு அரசு சான்றிதழ்யான வருமான சான்றிதழ், சாதி சான்றிதழ் உள்ளிட்ட சான்றிதழ்கள் கேட்டு தன்னிடம் வருவோரிடம் முத்தையன் அவர்கள் 100 ரூபாய் முதல் ஆயிரம் ரூபாய் வரை லஞ்சம் வாங்குவது வழக்கமாக வைத்துள்ளார். மேலும், லஞ்சம் கொடுக்காத நபர்களிடம் அலைக்கழிப்பதாக அப்பகுதி மக்கள் பல புகார்கள் தெரிவிக்கிறார்கள். 

இந்த நிலையில், கிராம நிர்வாக அலுவலத்திற்கு பயிர் காப்பீட்டுத் திட்டத்துக்கான பட்டா, சிட்டா, அடங்கல் வழங்க பெண் ஒருவர், விஏஓ முத்தையன் அவர்களிடம் சென்றுள்ளார். பின் வழக்கம் போல் இந்த பெண்ணிடம் முத்தையன் லஞ்சம் கேட்டுவுள்ளார், தரவில்லை என்றால் சான்றிதழ் வழங்க அலைக்கழிப்பதாகக் கூறியுள்ளார். பின்னர், அந்த பெண், வேற வழியின்றி லஞ்சம் கொடுத்து சான்றிதற் வாங்கியுள்ளார். இந்த லஞ்சம் வாங்கும் காட்சியினை வீடியோ எடுத்துள்ளனர். பின்னர் வீடியோ காட்சிகள் தற்போது, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 இந்த வீடியோ காட்சிகளை பார்த்த பொதுமக்கள் கிராம நிர்வாக அலுவலர் முத்தையன் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.