மகளுக்கு மாப்பிள்ளை பார்த்தாச்சு! சிறைக்கு சென்று கணவனிடம் போட்டோவை காட்டிய நளினி! திருமண ஏற்பாடுகள் விறுவிறு!

சிறைவாசம் அனுபவிக்கும் நளினி மற்றும் முருகன் தங்கள் மகளின் திருமணத்திற்காக விருவிருப்பாக ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.


தமிழக அரசியலில் அரசியலுக்கு அப்பாற்பட்டு நீண்ட காலமாக பேசப்பட்டு வருபவர்கள் ராஜீவ்காந்தி அவர்கள் கொலை வழக்கில் சிறைவாசம் அனுபவித்து வரும் 7 தமிழர்கள். இவர்களில் நளினி மற்றும் முருகன் ஆகியோர் கணவன் மனைவியாவர்.  இத்தம்பதியினருக்கு ஹரித்ரா என்ற மகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. நளினி பெண்கள் சிறையிலும் முருகன் ஆண்கள் சிறையிலும் வாழ்ந்து வருகின்றனர். 15 நாட்களுக்கு ஒரு முறை இருவரும் பார்த்து கொள்ளலாம் என்ற முறையுள்ளது.

இந்நிலையில் தன் மகளுக்கு திருமணம் செய்து வைப்பதற்காக நளினி ஒரு மாத கால அவகாசத்தில் பரோலில் வெளிவந்தார். 

அப்போது நளினியின் வழக்கறிஞர் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த போது, "நளினியின் மகளான ஹரித்ராவுக்கு வரன் பார்த்து வருகிறோம். நளினி அவருக்கு கண்டிப்பாக ஈழத்தமிழர் ஒருவர் தான் மாப்பிள்ளையாக வேண்டும் என்று ஆணித்தரமாக உள்ளார்.  மாப்பிள்ளை, இலங்கையோ அல்லது வெளிநாட்டையோ சேர்ந்தவராக இருக்கக்கூடும். திருமண ஏற்பாடுகளை செய்த பிறகு முருகனை பரோலில் எடுக்க திட்டமிட்டுள்ளோம்" என்று கூறியிருந்தார்.

நேற்று காலை தன் கணவரை காண நளினி சென்றார். அப்போது அவரிடம் தன் மகளான ஹரித்ராவிக்கு பார்க்க பட்டுள்ள மாப்பிள்ளையின் புகைப்படங்களை முருகனிடம் காண்பித்தார். முருகனிடம் இருந்து மாப்பிள்ளை பற்றிய சம்மதத்தையும் நளினி பெற்றுக்கொண்டார். இருவரும் சற்று நேரம் மகிழ்ந்து கலந்துரையாடினர்.

இதனிடையே சமீபத்தில் முன்கூட்டியே தன்னை விடுதலை செய்யுமாறு நளினி நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார். அந்த மனுவுக்கு அரசு சார்பில் அளிக்கப்பட்ட பதிலில் "ஆயுள் கைதிகள் தங்கள் ஆயுள் முழுவதுமே சிறைச்சாலையில் கழிக்க வேண்டும். அவர்களுக்கு விடுதலை என்பதே கிடையாது" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த சம்பவமானது அரசியல் வட்டாரத்தில் பெரும் பிரளயத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.