நளினி மகள் ஹரித்ராவின் வருங்கால கணவன் இவரா? சற்று முன் வெளியான தகவல்!

இந்திய நாட்டின் முன்னாள் பிரதமரான ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 28 ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவித்து வரும் நளினி தன் மகள் திருமணத்திற்காக பரோலில் வெளிவந்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தமிழக அரசியலில் அரசியலுக்கு அப்பாற்பட்டு நீண்ட காலமாக பேசப்பட்டு வருபவர்கள் ராஜீவ் காந்தி அவர்கள் கொலை வழக்கில் சிறைவாசம் அனுபவித்து வரும் 7 தமிழர்கள். இவர்களில் நளினி மற்றும் முருகன் ஆகியோர் கணவன் மனைவியாவர்.  இத்தம்பதியினருக்கு ஹரித்ரா என்ற மகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் தன் மகளுக்கு திருமணம் செய்து வைப்பதற்காக நளினி ஒரு மாத கால அவகாசத்தில் பரோலில் வெளிவந்துள்ளார். நீதிமன்றம் அவரை செய்தியாளர்களிடம் பேசக்கூடாது என்றும், தினமும் காவல் நிலையத்திற்கு வந்து கையெழுத்திட வேண்டும் என்றும் பல்வேறு விதிவிலக்குகளில் பின்பற்றுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.

அதன்படி நளினியின் வழக்கறிஞர் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார், அப்போது அவர் கூறியதாவது: நளினியின் மகளான ஹரித்ராவுக்கு வரன் பார்த்து வருகிறோம். நளினி அவருக்கு கண்டிப்பாக ஈழத்தமிழர் ஒருவர் தான் மாப்பிள்ளையாக வேண்டும் என்று ஆணித்தரமாக உள்ளார். செய்தியாளர்கள் அவரிடம், மாப்பிள்ளை எந்த ஊரில் இருந்து வர உள்ளார் என்று கேட்டதற்கு, இலங்கையையோ வெளிநாட்டையோ சேர்ந்தவராக இருக்கக்கூடும் என்று கூறியுள்ளார்.

திருமண ஏற்பாடுகளை செய்த பிறகு முருகனை பரோலில் எடுக்க திட்டமிட்டு உள்ளதாக கூறியுள்ளார். இந்த சம்பவமானது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.