ஜெயலலிதாவுக்கு விஷ ஊசி? சற்று முன் வெளியான அதிர்ச்சித் தகவல்!

ஜெயலலிதா விஷ ஊசி போட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்கிற ரீதியில் நக்கீரன் வார இதழ் பரபரப்பு செய்தி வெளியிட்டுள்ளது.


ஜெயலலிதா உடல் நிலை பாதிக்கப்பட்டு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது முன்பிலிருந்தே அவரது உடல்நிலை குறித்து நக்கீரன் வார இதழ் தொடர்ந்து பல்வேறு தகவல்களை வெளியிட்டு வந்தது. அந்த வகையில் நக்கீரன் வெளியிட்ட தகவல்கள் அனைத்துமே அடுத்தடுத்து உண்மையாக அமைந்தது.

ஜெயலலிதா மிகவும் சீரியஸ் நிலையில்தான் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று தகவலை முதலில் வெளியிட்டது நக்கீரன் வார இதழ் தான். இந்த தகவல்களை முதலில் மறுத்த நிலையில் பின்னர் அப்பல்லோ மருத்துவமனையை ஜெயலலிதா மிக சீரியஸான நிலையில் தான் அனுமதிக்கப்பட்டதை ஒப்புக்கொண்டது.

இதேபோல் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து நக்கீரன் கூறிய தகவல்கள் அனைத்துமே உண்மை என்கிற ரீதியில்தான் அடுத்தடுத்து வெளியான சம்பவங்கள் அமைந்திருந்தன. இந்த நிலையில்தான் ஜெயலலிதாவின் உடலில் உயிருக்கு தீங்கு விளைவிக்கும் சோடியம் பொட்டாசியம் போன்ற வேதிப் பொருட்கள் அதிகம் இருந்தது என்கிறார் ஒரு திடுக் தகவலை நக்கீரன் வெளியிட்டுள்ளது.

ஜெயலலிதா மறைந்த பிறகு அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யவில்லை என்றாலும் கூட அவரது ரத்த மாதிரி மற்றும் திசு மாதிரி சோதனைக்கு உள்ளாக்கப்பட்டதாக நக்கீரன் தெரிவித்துள்ளது. பிரபல மருத்துவர் ஒருவர் அதாவது லண்டனைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் ஜெயலலிதாவின் ரத்த மாதிரிகள் மற்றும் திசுக்களை ஆராய்ந்ததில் ஜெயலலிதா உடலில் சோடியம் மற்றும் பொட்டாசியம் வேதிப் பொருட்கள் அதிகம் இருந்ததை கண்டு பிடித்ததாக நக்கீரன் கூறியுள்ளது.

சர்க்கரை நோய் மற்றும் சிறுநீரக பாதிப்பில் பாதிக்கப்பட்டு ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை சுட்டிக்காட்டியுள்ள நக்கீரன் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ள ஒருவருக்கு உடலில் அதிக அளவு பொட்டாசியம் எப்படி ஏறியது என்று ஒரு கேள்வி எழுப்பியுள்ளது. 

மேலும் சிறுநீரகம் பாதிக்கப் பட்டுள்ள ஜெயலலிதா உடலில் சோடியம் அதிகமாக இருந்தது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக நக்கீரன் கூறியுள்ளது. இந்தத் தகவல்களையெல்லாம் மையமாக வைத்து அப்பல்லோவில் பணியாற்றிய மருத்துவர்கள் சிலர் செய்தியாளர்களை சந்திக்க திட்டமிட்டதாகவும் பிறகு ஏதோ ஒரு காரணத்திற்காக அந்த செய்தியாளர் சந்திப்பு ரத்து செய்யப்பட்டு விட்டதாகவும் நக்கீரன் தெரிவித்துள்ளது.

இவற்றையெல்லாம் வைத்து பார்க்கும்போது ஜெயலலிதா உடலில் அதிக சோடியம் மற்றும் பொட்டாசியம் ஊசி மூலமாக அதாவது விஷ ஊசி செலுத்தப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுவதாகவும் நக்கீரன் பரபரப்பை கிளப்பியுள்ளது.