பள்ளிக்கூட மாணவிகள் முதல் பெண் டாக்டர் வரை..! நாகர்கோவில் இளைஞனின் செல்போனில் இருந்த நிர்வாண படங்கள்!

பெண்களை ஏமாற்றி பணம் கேட்டு தொல்லை கொடுத்துவந்த நாகர்கோவிலை சேர்ந்த இளைஞர் ஒருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


சென்னையை சேர்ந்த பெண் டாக்டர் ஒருவரை காதலித்து வருவதாக கூறி பணம் பறித்து வந்த நாகர்கோவிலை சேர்ந்த இளைஞரை அந்தப் பெண் டாக்டர் அளித்த புகாரின் பேரில் போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து அந்த பெண் டாக்டர் அளித்த புகாரில் கூறியதாவது: சில வருடங்களுக்கு முன்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் என்னுடைய பதிவிற்கு நாகர்கோவிலை சேர்ந்த சுஜி என்பவர் கமெண்ட் செய்திருந்தார். அந்த சமயத்தில் மருத்துவம் தொடர்பாக சுஜி என்பவர் என்னிடத்தில் பேசினார். அதன்பிறகு போன் செய்து பேசிய சுஜி தன்னை ஒரு சமூக ஆர்வலர் என்றும் பெண்ணியவாதி என்று கூறினார்.

அந்த நேரத்தில் நான் ஒரு சுற்றுலாவுக்காக நாகர்கோவில் சென்றிருந்தேன். அந்த சமயத்தில் நான் அவரை நாகர்கோவிலில் சந்தித்தேன். நேரில் பேசும் போது அவர் மிகவும் அன்பாகவும் அக்கறையாகவும் பேசினார். பின்னர் சுற்றுலாவை முடித்து விட்டு நான் நாகர்கோவிலில் இருந்து சென்னை திரும்பும் முன் தன்னுடைய வங்கி கணக்குகளை எனது செல்போனில் பதிவு செய்தார். அதுமட்டுமல்லாது என்னுடைய சம்பளம் உயரும் பற்றியும் அவர் கேட்டறிந்தார். அதன்பிறகு சுஜி ஆன்லைனில் என்னிடம் அவசர செலவுக்கு பணம் கேட்டார். நானும் அவரது அக்கவுண்டுக்கு பணம் அனுப்பி வைப்பேன். 

அதன் பிறகு பேசிய சுஜி எனது மாமாவிற்கு உடல்நிலை சரியில்லை. ஆகையால் நான் அவரை சென்னைக்கு கொண்டு வர முயற்சி செய்து வருகிறேன் என்று கூறினார். இதனால் அதற்கான உதவிகளையும் நான் அவருக்கு செய்தேன். அதன்பிறகு வீடியோ காலிங் பேசி வந்த நாங்கள் எங்களது எதிர்காலத்தைப் பற்றி திட்டமிட்டோம். திருமணம் செய்து கொள்ளப்போகிறோம் என்று நினைத்து அவர் கேட்ட போதெல்லாம் லட்சக்கணக்கில் அவருக்கு பணத்தை அனுப்பி உள்ளேன். 

அதன்பிறகு அவரது பேச்சு மற்றும் நடவடிக்கையில் மாற்றம் தெரிந்தது. இதனால் அவருக்கு பணம் அனுப்புவதை நான் நிறுத்திக்கொண்டேன். பின்பு சுஜி என்னிடம் தொடர்பு கொண்டு பணத்தை அனுப்பவில்லை என்றால் நாம் இருவரும் சந்திக்கும் போது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு விடுவேன் என்று என்னை மிரட்டினார். இதனால் என்ன செய்வதென்று அறியாமல் அவரது நம்பரை நான் பிளாக் செய்தேன். இதனை அறிந்த சுஜி வேறு நம்பரில் இருந்து எனக்கு போன் செய்து என்னை தொடர்ந்து பணம் கொடுக்கும்படி மிரட்டி வந்தார். இல்லையென்றால் இன்ஸ்டாகிராமில் நாங்கள் எடுத்துக்கொண்ட புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டி வந்தார். அதன்படி இன்ஸ்டாகிராமில் சில புகைப்படங்களையும் அவர் பதிவு செய்தார்.

இதனால் அந்த பெண் டாக்டர் வேறு வழியில்லாமல் கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி க்கு இந்த சம்பவம் தொடர்பாக ஈமெயிலில் புகார் அனுப்பியுள்ளார். அந்த புகாரின் பேரில் கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி அதிரடி நடவடிக்கை எடுத்து சுஜி என்பவரை கைது செய்துள்ளார். விசாரணையில் அவர் இந்த பெண் டாக்டர் மட்டுமல்லாமல் பல்வேறு பெண்களை ஏமாற்றி உள்ளதாக தெரியவந்துள்ளது. அது மட்டுமல்லாமல் அவரது செல்போனில் பள்ளிக்கூட மாணவிகள் முதல் பல்வேறு பெண்களுடன் நெருக்கமாக உள்ளது போல புகைப்படங்கள் இருக்கின்றன எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

கிடைத்துள்ள ஆதாரங்களை வைத்து விசாரணை நடத்திய பின்னரே சுஜி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.